திங்கள், 20 செப்டம்பர், 2010

நான்கு நிலைகள்

முதல் நிலை
                        ஒரு கவிதையை முதன் முதலாக  அச்செழுத்துக்கள்  வாயிலாகப் பெறும் பார்வைப் புலன் மூலம்(அல்லது  பிறர் படிக்க கேட்டால் பெறும் கேள்விப் புலன் மூலம்)பெறும்  ஒருவரிடம்  இவ்வனுபவத்தைப்  பொறுத்தே  ஏனையவை நிகழ்கின்றன.ஆனால்  பெரும்பாலானவர்களிடம்  இவை  முக்கியத்துவம்  பெறுவதில்லை.இக்காட்சி  தூண்டல்-துலங்கல்  முறையை ஒட்டியே  நிகழ்கிறது.தனிப்பட்ட  எழுத்துக்களின் வடிவங்கள்,அவற்றின் அளவு,எழுத்துக்களிடையே  உள்ள  இடைவெளி  ஆகியவை போன்ற  கூறுகள்  இந்த  எதிர் வினையில்  மிகச் சிறிய  பங்கினையே  பெறுகின்றன.இந்தக் கூறின் அடிப்படையில்  படிப்பவர்கள் பெரிதும்  வேறுபடுகின்றனர்.சிலரிடம்  பழக்கம்  பெரும் பங்கு  பெறுகின்றது.தாம்  வழக்கமாகப்  படித்துப் பழகிய  அதே  புத்தகத்திலிருந்து  ஒரு கவிதையைப்  படித்தால் தான்  அதற்குரிய அனுபவத்தைச்  சிலரால்  பெற முடிகின்றது.புதிய பதிப்பாகவோ,தாம்  படித்துப்  பழகாத புத்தகமாகவோ  இருந்தால்  தடுமாற்றம்  ஏற்படுகின்றது.

இரண்டாம் நிலை;
                                கண்ணால்  கண்டு உணர்ந்த  அல்லது  காதால்  கேட்டு  உணர்ந்த  சொற்களுக்குரிய  பொருள்களின்  சாயல்களை  மனம்  உணர்தல்.
                                                     சொற்களின்  காட்சிச் சாயலைத் தவிர  வேறு  இரண்டு  சாயல்கள் அவற்றுடன்  பிணைக்கப் பெற்றுள்ளன.அவை  கேள்விப் புலச் சாயல் ,ஒலிப்புப் புலச் சாயல்  என்பவை.இவற்றைக் ''கட்டுண்ட சாயல்கள்'' என்பார் ரிச்சர்ட்ஸ்.இவை  இரண்டும் அடங்கிய  சொற் சாயல் தான்
கவிதையின் ''முறையணைந்த  வடிவம்''