இருபத்தைந்தாண்டு கடந்ததை மட்டுமல்ல,
இல்லறத்தில் மலர்ந்ததையும்
இருபது வரிகளில் தந்தாய்!
இருவிழிகள் சுரந்தது,
ஈரவிழியின் சுரப்பல்ல-அது
இதயச் சுரப்பு.
இடையில் நிகழ்ந்ததை
இதயத்தின் விரிசல் எனவா?
உள்ளத்தின் உரசல் எனவா?
என்னவோ இருக்கட்டும்.
இனிய நட்பாயில்லாமல்
இருந்தாலும் இதயநட்பு இது!
இந்து , வளரும் , தேயும்
இல்லாமல் போகாது.
ஆன்மிகமும் , கவிதையும்
ஒரு வழிப்பாதையாய்க் கொண்ட
நமக்குள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக