கவிதையனுபவத்திற்கு உணர்ச்சியும்,உள்ளக்கிளர்ச்சிகளும் மிகவும் இன்றியமையாதவை.கவிதையை இயற்றிய கவிஞனின் உணர்ச்சி,அதைப் படிக்கும் நம் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றும்பொழுதே கவிதை அனுபவம் ஏற்படுகிறது.
நரம்பு மண்டலம் அறிதலின் அடிப்படையாக அமைகிறது.
பெருமூளை; இது இரண்டு அரைக்கோளங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.இது நெருங்கி அமைக்கப் பெற்ற நரம்பணுத்தொகுதிகளால் அமைந்த்து.மடிப்புகள் அதிகமாக,அதிகமாக அறிவும் அதிகமாகிறதென்பர்.ஐம்பொறிகளாகிய பார்வை,கேள்வி,ஊறு,நாற்றம்,சுவை இவை ஒவ்வொன்றும் மூளையில் ஒவ்வொரு பரப்பைப் பெற்றுள்ளன.இவ்வாறு தொழிற்பாகுபாடு இருப்பினும் மூளை ஒன்றாகவே செய்கின்றது.
நம் அனுபவங்களை இயைபுறுத்தலில் இந்நரம்புகள் ஈடுபட்டுள்ளன. நம் உடற் செயல்களும்,உள்ளச் செயல்களும் தூண்டல்-துலங்கல் விதியைத் தழுவியுள்ளன.
ஒருவனுடைய அக அமைப்பினைப் பற்றி நாம் அதிகமாகச் சோதிக்க முடியாதென்பதும்,அவருடைய நிலையான சிறப்பியல்புகள் அவருடைய நடத்தையினின்றே தீர்மானிக்கப் பெறல் வேண்டும் என்பது உண்மையே.உணர்ச்சி நீக்கத்தின் போது (anasthesia)மருத்துவர் கத்தியால் அறுப்பதை நோயாளி உணர்வதில்லை.கடுமையாகப் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது போர்வீரன் தன்மீது படும் காயத்தை அறிவதில்லை.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
என்றல்லவோ போர்வீரன் நிலையினைக் காட்டுகின்றார் வள்ளுவப்பெருந்தகை.கருத்து நிலையில் செய்யிம் செயல்கள் எண்ணற்றவை.மொழி இதற்குப் பெருந்துணை புரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக