மொழி சிந்தனைக்குரிய செய்திகளைத் திரட்டுவதற்குப் பெரிதும் உதவுகிறது.சில சமயம் மொழி சிந்தனைக்கு தடையாகவும் அமைதல் கூடும்.அலங்காரச் சொற்றொடர் நம்மைத் தவறான கருத்திற்குக் கொண்டு செலுத்துவதாகவும் அமையலாம்.அல்லது பொருள் புரியாமலே புரிந்த்தாக எண்ணும்படி செய்துவிடும்.சொல்மாரியை-சொற்பொழிவினை -கருத்துப் பொழிவாக கொண்டு மயங்குகின்றனர்.இக்கருத்துநிலைச் செயல்களால் ஏற்படும் தூண்டல்களே கவிதையனுபவத்திற்கு முதல் காரணமாக அமைகின்றன.
எண்டோகிரீன் சமநிலை-சில இயல்பான மனப்போக்குகளிலும்,உள்ளக்கிளர்ச்சிகளிலும் தனியாளிடம் காணக்கிடக்கும் வேற்றுமைகளுக்கு அவனிடம் அமைந்திருக்கும் எண்டோகிரீன் அமைப்பே காரணம் என்று கருதலாம்.ஒருவர் தம் ஆளுமையை எண்டோகிரீன் அளவைகளைக் கொண்டு பகுத்தறிய முனைவதும் ,அதன் பிறகு சுரப்பிச் சிகிச்சையால் மேம்பாடு அடையச் செய்ய எண்ணுவதும் பயன்அற்ற செயல்களாகும்.
தனியாளின் எதிர்வினையில் இன்னொரு சிக்கலும் உள்ளது.அது தன் நிலையைக் குறித்துத் தன் நண்பர்கள் கூறும் குறிப்புகளைப் பொறுத்து எதிர்வினை புரிதலாகும்.புரிசைச் சுரப்பி செயற்படுவது குறைந்தால் அது மடிமையை உண்டாக்குகிறது.ஆனால் தனியாள் அவனுடைய மடிமையைப் பற்றிக் கிண்டல் செய்தால் அவனிடம் எரிச்சல்தன்மை வளர்கின்றது.எண்டோகிரீன் சுரப்பிகள் தாம் ஆளுமையின் அடிப்படையான உயிரியல்கூறுகள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும்.கவிதையைப் படித்துச் சுவைப்பதில் ஓரளவு இந்த ஆளுமை பங்கு கொள்கிறது,உணர்ச்சிகள் முதலியவற்றை நன்னிலையில் கட்டுப்படுதிதிய ஒரு நிலை தானே ஆளுமை என்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக