சனி, 14 ஏப்ரல், 2012

விடியலை நோக்கி.......


        தன் வீடு ,தன் வாசல் ,தன் உலகம் விடுத்து ஒரு
        அன்னியனின் அகம் உணர இயல்பாக நேயமுற்றல்
         உன் உயிரும் அண்டத்தின் அணுவென்றோ புரிந்திட்டால்
          பொன் விடியல் நோக்கி புதுப்பாதை அமைத்திடலாம்

                                  வாழ்வின் நோக்கமே வசந்தம் நோக்குவது தானே.விடியல் என்பது மலர்ச்சி.விடிதலும் வாழ்வின் மகிழ்ச்சி.அன்புடைமை என்பதில் தானே உலகமே உயிர்த்து நிற்கிறது.
                               அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
                                என்பும் உரியர் பிறர்க்கு.
நம் கவியரசரின் வரிகளில்,
                                    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
                                     வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
                                      வாழை போலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
                                     உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
                                     மனம் ,மனம் அது கோவிலாகலாம்.
எப்பொழுது கோவிலாகும் ?அன்னியனின் அகம் உணர,இயல்பாக நேயமுற்றால்மனம் உயரும்.மனம் உயர்ந்தால் பொன்னுலகு நோக்கி புதுப் பாதை தேட வேண்டியதில்லை.தானே உருவாகும்.
தன் வீடு,தன் வாசல் ,தன் உலகம் விடுத்து
என்ற கவிஞரின் சிந்தனை புரட்சிக் கவிஞரின் சிந்தனையை அடியொற்றியதாக இருக்கிறது.

3 கருத்துகள்:

  1. விடியலை நோக்கி....

    நல்ல எண்ணங்களைப் பகிர்ந்துள்ளதற்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. 'அன்னியனின் அகம் உணர இயல்பாக நேயமுற்றல்
    உன் உயிரும் அண்டத்தின் அணுவென்றோ புரிந்திட்டால்
    பொன் விடியல் நோக்கி புதுப்பாதை அமைத்திடலாம்' அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு