இலக்கியம் என்பது தனிமனிதர்களின் சாதனைத் தொகுதிதான்.காலந்தோறும்
கவிஞர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.தமிழ்அம்மை இப்போது
புதுப்புது வடிவுகளில் கவிதையைப் பெற்று எடுத்துக் கொள்கிறாள் என்கிறார்
கி.இராஜநாரயணன் அவர்கள்.தமிழன்னை தற்காலத்தில் பெற்றெடுத்த
குழந்தை புதுக்கவிதை என்னும் புதுப்பூ.பாரதி மகாகவி தான்.பாரதிதாசன்
புரட்சிக்கவி தான்.ஆனாலும் இன்று தமிழ்க்கவிதை பாரதியின்
காலகட்டத்தைத் தாண்டி,பாரதிதாசனின் யுகத்தைக் கடந்து புதியதொரு
கட்டத்தை அடைந்துள்ளது.உந்த மாற்றத்திற்குக் காரணம் கவிஞர்கள்
மட்டுமல்ல,காலமும்,,களமும் தான்.
அரைத்த மாவையே
குழைத்து உருட்டி
பழமைக் கல்லின்
நடுவில் நிறுத்தி
யாப்பு உருளையால்
எண்சீர் அளவுக்கு
இழுத்துத் தேய்த்து
உலர்ந்த உவமை
மாவைத் தூவி
எடுத்துச் சிலேடை
எண்ணையில் போட
' பஃப்' என
உப்பிச் சிரித்தது அது!
அதை ஆசையாய்
எடுத்து இலையில்
போடும் வேளையில்
ஒரு புதுக்காற்று
' குப்' பென வீசிற்று, ஓ!
குனிந்து பார்த்தேன்
உடைந்த அதற்குள்
ஒன்றுமே இல்லை!
புதுக்காற்றின் முன்னால் மரபு அப்பளம் போல்
நொறுங்கிப் போகிறது என்கிறார் புவியரசு.மரபிலிருந்து பெறுவதற்கு
எதுவுமில்லை என்று பேசுகிறது இந்தக் கவிதை.அதே சமயம் மரபில்
காலூன்றி புதுமையில் சிறகு விரிக்கிறோம் என்று இன்றைய கவிஞர்கள்
பேசுகிறார்கள்.

சொன்ன கருத்தும் சொல்லிப்போனவிதமும்
பதிலளிநீக்குமனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஏன் இவ்வளவு இடைவெளி
பதிலளிநீக்குஇனியேனும் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்..
வாழ்த்துக்களுடன்