செவ்வாய், 23 நவம்பர், 2010

சொல் மதிப்பு

கவிதை  மதிப்புடைய  சொற்கள் ;
                            கவிதையில்  பயிலும்  சொற்களைத்  தனித்தனியாக  எடுத்துப்  பார்க்கும் பொழுது  அவை தரும் பொருள்  வேறு;அவை  ஏனைய  சொற்களுடன்  உறவு  கொண்டு  மனத்தில் படும் பொழுது  தரும்  பொருள்  வேறு.
எனவே ,கவிதையின்  முழுக் கருத்தையும்  உள்ளங் கொள்ளாமல்  சொற் பொருளை  மட்டும் ஆராய்தல்  பெருந்தவறு ;கவிதையில்  பயிலும்  சொற்களுக்கென்று  தனி  ஓசையும்  இல்லை ;பொருளும்  இல்லை ;பல  சொற்கள்  கவிதையில்  உறவு  கொள்ளும்  பொழுது தான்  அவை  பொருட் சிறப்பைப்  பெறுகின்றன.
                                   ஊர்,கேளிர்,யாதும்   என்ற  சொற்கள்  நாம்  அறிந்தவையே;
அகராதியில்  அவற்றிற்குப்  பொருள் எழுதப் பெற்றிருக்கும்.ஆனால்,கவிஞன் ஒருவன்,
                                     யாதும்  ஊரே ;யாவரும்  கேளிர்
என்று பாடிய பின்னர்  அச் சொற்றொடரின்  பொருளே  மாறிவிடுகிறது.அஃது  
உலக  சகோதரத்துவத்தை  உணர்த்துகின்றது.
சாதாரணச் சொற்கள் கூட  கவிதை வடிவு  பெறுங்கால்,ஒரு  தனிப்பட்ட  மதிப்பினைப் பெற்றுவிடுகின்றன.இம்மதிப்புடைய  சொற்கள்  உள்ளவை தாம்
கவிதைகள் ;இந்த மதிப்பைக் 'கவிதை மதிப்பு' எனக்  குறிப்பிடுவர்  திறனாய்வாளர்.

சொல் வளம்

சொல் வளம்   என்றவுடன்  நிகண்டுகள்  அல்லது  அகராதியிலுள்ள  சொற்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டு அவற்றைக் கவிஞன்  தன் கவிதைகளில் ஆளுதல் என்று கருதுதல் தவறு.
     
                                 பஞ்சியொளிர்  விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
                                 செஞ்செவிய  கஞ்சநிமிர்  சீறடிய ளாகி
                                 அஞ்சொலிய   மஞ்ஞையென  அன்னமென மின்னும்
                                 வஞ்சியென  நஞ்சமென வஞ்சமகள்  வந்தாள்

சொல்வோன் குறிப்பால் பெறுவது ;
சொற்கள் பொருளை என்ன தான் தெரிவித்த போதிலும்மனத்திலுள்ள கருத்துக்கள் யாவும் சொற்களில் அடங்கிவிடும் என்று கூற இயலாது.ஆனால்,கவிதையில் பயின்று வரும் சொற்கள் பொருட் செறிவு மிக்கவை.காரணம்,அவை ஏற்கனவே பல கவிதைகளில் பயன்படுத்திய கற்பனைச் செறிவும்,பொருள் வளமும் உடையவையாக உள்ளன.சொற்கள் பொருளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் தெரிவிக்கின்றன.பழக்கத்திலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இத்தன்மை உண்டு.இதன் அளவையும் ஓரளவு அறுதியிட்டு விடலாம்.நாள் தோறும் நாம் வழங்கிவரும் சொற்கள் கூட இவ்வாற்றலைப் பெற்றுள்ளன.

புதன், 17 நவம்பர், 2010

பனுவல்

சொற்கள்  கருத்துக்களை  உணர்த்துவதற்குரிய  குறியீடுகள்  என்றும்,அவற்றின்  பண்புகள்  யாவை  என்றும்  கவிதைகளால்  உணரலாம்.இச் சொற்களைக் கொண்டே  கவிஞன் தன் கற்பனைத் திறனால்  கவிதைகளைப்  படைக்கிறான்.
இக் கருத்தை  நன்னூலாரும்,
                                    ''பஞ்சிதன்   சொல்லாப்   பனுவலிழையாகச்
                                              செஞ்சொற்  புலவனே  சேயிழையா-எஞ்சாத
                                               கையேவா  யாகக்   கதிரே  மதியாக
                                              மையிலா   நூன்  முடியுமாறு''
 
                                               
உரை நடையில்  ஆளப் பெறும்  சொற்களுக்கும்,கவிதையில் கையாளப் பெறும் சொற்களுக்கும்  வேற்றுமை  இல்லை.கவிஞன்  அந்தச் சொற்களைக்  கையாளும்  முறையில் தான்   வேற்றுமை  உள்ளது.
ஒவ்வொரு  சொல்லுக்கும்  உரிய  நேரான  பொருளைத் தவுர,வழிவழியாக  அந்தச்  சொற்கள்  ஆளப் பெறும்  இடங்களின்  தொடர்பால்  அவற்றுடன்  சேர்ந்தமைந்த   கருத்துக்களும் உள்ளன.கவிதைகளில்  சொற்கள்  அமையும் பொழுது  இடத்திற்கேற்றவாறும்,உணர்ச்சிக்கேற்றவாறும்,சுவைக்கேற்றவாறும்  அமைந்து கவிதையைப்  பொலிவுடையதாக்குகிறது.

செவ்வாய், 16 நவம்பர், 2010

கற்பனையின்பம்

கற்பனை  என்பது   புலன்கள்  நேரே  ஒரு  பொருளை  அனுபவியாத  காலத்திலும்  அந்தப்  பொருளை  நினைவுக்குக் கொண்டு  வந்து  அப் பொருளினிடத்து  மீண்டும்  அனுபவத்தை  ஏற்ற வல்ல  ஒருவகை ஆற்றல்.கவிதைத் திறன்  கவிதைகளைக் கனிவித்துக்  கற்போரின்  மனத்தை  விரிந்த  பார்வையில்  செலுத்த வல்லது.காலைக் கதிரவனை  வருணிக்கும்  பாரதியின்  அற்புதச்  சொல்லோவியம்.