செவ்வாய், 16 நவம்பர், 2010

கற்பனையின்பம்

கற்பனை  என்பது   புலன்கள்  நேரே  ஒரு  பொருளை  அனுபவியாத  காலத்திலும்  அந்தப்  பொருளை  நினைவுக்குக் கொண்டு  வந்து  அப் பொருளினிடத்து  மீண்டும்  அனுபவத்தை  ஏற்ற வல்ல  ஒருவகை ஆற்றல்.கவிதைத் திறன்  கவிதைகளைக் கனிவித்துக்  கற்போரின்  மனத்தை  விரிந்த  பார்வையில்  செலுத்த வல்லது.காலைக் கதிரவனை  வருணிக்கும்  பாரதியின்  அற்புதச்  சொல்லோவியம்.

                        தங்கம்   உருக்கித்  தழல்  குறைத்துத்  தேனாக்கி

                        எங்கும்    பரப்பியதோர்    இங்கிதமோ?



இளஞ் சூரியனின்  கதிர்கள்  உருக்கி ஓடவிட்ட  தங்கம் போல் பரவி வருகின்றனவாம்.உருக்கிய  தங்கமாயினும்  என்ன  மாயத்தாலோ  சூடு  குறைந்து இருக்கின்றதாம்.இத்தகைய  ஒளியுடன்  அக் காட்சியில் இனிமையும் கலந்து  கொஞ்சுவதைக் காணலாம்.இதைத்தான்கவிஞன் ''தழல்  குறைத்துத் தேனாக்கி''என்று  இங்கிதமாக  வெளியிட்டுள்ளான்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக