கவிதை முருகுணர்ச்சியை நல்குவது.எங்கெல்லாம் அழகு இருக்கின்றதோ அங்கெல்லாம் கவிதை தோன்றும்.நக்கீரர் தாம் உணர்ந்த அழகைப் பொதுமுறையில் திருமுருகாற்றுப் படையில் பாடி மகிழ்ந்தார்.அதில் அவர் அழகின் இயல்பை''கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு''என்று சுட்டி உரைத்துள்ளார்.
இவ்வாறு உணர்வு நிலையை நிலைபேறாக் குவித்து நம்மால் அளந்தறிய முடியாத பெரும்பயனை நல்க வல்லவை அழகுணர்ச்சி பொதிந்துள்ள கவிதைகள்.இத்தகைய கவிதைகளைப் படித்துத் துய்த்தல் மிகவும் இன்றியமையாதது.இளைஞர்களையும் இவற்றில் ஈடுபடச் செய்வது மிகவும் வேண்டப் படுவதொன்று.
பால் கறந்த மாத்திரையே யுண்பார்க்குஞ் சுவை பயக்குமாயினும்,அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின் உண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும்,முற்றின கருப்பங் கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும் மேலும் அதனைப் பாகு திரளக் காய்ச்சிச் சர்க்கரைக் கட்டியாக எடுத்துணிபார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும்,உரையும் நலம் பயப்பதொன்றாயினும் அதனைக் காட்டிலும் பாட்டாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக