கவிதை ஓர் அரிய கலை.நுண்ணிய கலை.கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புத சாதனம்.கவிதையனுபவம்.அது கூறும் பொருளில் இல்லை.கூறும் முறையில் தான் இருக்கிறது.கவிஞன் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெற வேண்டும் என்று எண்ணிச் சில யுக்தி முறைகளைக் கையாண்டு கவிதையைப் படைக்கிறான்.அந்த யுக்தி முறைகளால் உணர்ச்சியை அதில் பொதிய வைக்கிறான்.
கற்பனை,சொற்களின் அமைப்பு முறை,ஒலி நயம்,யாப்பு முறை,அணி நலன்,தொடை நயம்,குறிப்புப் பொருள்,சுவைகள் போன்ற சில முறைகளை மேற்கொண்டு கவிதையைப் படைக்கிறான்.கவிதையைப் படிக்க வேண்டிய முறையில் இவை தோன்றுமாறு படித்தால் கவிஞன் பெற்ற அனுபவத்தையே நாமும் பெறுகிறோம்.கவிஞன் மேற்கொள்ளும் யுக்திமுறைகளையெல்லாம் ஓரளவு விளக்கமாக எடுத்தியம்புவது கவிதையின் சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக