சீதா பிராட்டியின் அழகை வருணிக்கப் புகுந்த கம்ப நாடன் பொன்னின் சோதி போதின் நாற்றம்,தேனின் தீஞ்சுவை என்று ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்க்கிறான்.ஒன்று கூட அவன் சீதையைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தை வெளியிடும் ஆற்றல் பெறவில்லை.இறுதியில் ,'செஞ்சொற் கவியின்பம்' என்று சொல்லி மனநிறைவு பெறுகிறான்.
உள்ளத்திலுள்ளவற்றை உணர்ச்சி பொங்கத் தெள்ளத் தெளிந்த சொற்களால் எடுத்துரைப்பது தான் கவிதையாகும்.
கவிமணியவர்களும்,
உள்ளத்துள்ளது கவிதை-இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை
தெளிந்துரைப்பது கவிதை
என்று கவிதைக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
நன்னூலாசிரியரும்,
பல்வகைத் தாதுவின்
உயிர்க்(கு) உடல் போல்,பல
சொல்லால் பொருட்(கு) இட
னாக உணர்வின்
வல்லோர் அணி பெறச்
செய்வன செய்யுள்
என்று கவிதையை வரையறுக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக