செவ்வாய், 23 நவம்பர், 2010

சொல் மதிப்பு

கவிதை  மதிப்புடைய  சொற்கள் ;
                            கவிதையில்  பயிலும்  சொற்களைத்  தனித்தனியாக  எடுத்துப்  பார்க்கும் பொழுது  அவை தரும் பொருள்  வேறு;அவை  ஏனைய  சொற்களுடன்  உறவு  கொண்டு  மனத்தில் படும் பொழுது  தரும்  பொருள்  வேறு.
எனவே ,கவிதையின்  முழுக் கருத்தையும்  உள்ளங் கொள்ளாமல்  சொற் பொருளை  மட்டும் ஆராய்தல்  பெருந்தவறு ;கவிதையில்  பயிலும்  சொற்களுக்கென்று  தனி  ஓசையும்  இல்லை ;பொருளும்  இல்லை ;பல  சொற்கள்  கவிதையில்  உறவு  கொள்ளும்  பொழுது தான்  அவை  பொருட் சிறப்பைப்  பெறுகின்றன.
                                   ஊர்,கேளிர்,யாதும்   என்ற  சொற்கள்  நாம்  அறிந்தவையே;
அகராதியில்  அவற்றிற்குப்  பொருள் எழுதப் பெற்றிருக்கும்.ஆனால்,கவிஞன் ஒருவன்,
                                     யாதும்  ஊரே ;யாவரும்  கேளிர்
என்று பாடிய பின்னர்  அச் சொற்றொடரின்  பொருளே  மாறிவிடுகிறது.அஃது  
உலக  சகோதரத்துவத்தை  உணர்த்துகின்றது.
சாதாரணச் சொற்கள் கூட  கவிதை வடிவு  பெறுங்கால்,ஒரு  தனிப்பட்ட  மதிப்பினைப் பெற்றுவிடுகின்றன.இம்மதிப்புடைய  சொற்கள்  உள்ளவை தாம்
கவிதைகள் ;இந்த மதிப்பைக் 'கவிதை மதிப்பு' எனக்  குறிப்பிடுவர்  திறனாய்வாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக