சில சொற்கள் உறவு கொள்ளும் முறையாலேயே புதிய ஒலியின்பத்தையும்,
புதிய பொருளுணர்ச்சியையும் தருகின்றன.அங்ஙனம் அமையும் முறை கவிதை
பாடும் கவிஞனுக்கே முதலில் புலனாவதில்லை.கவிதையாக வடிவெடுத்த பிறகு அகராதியில் இல்லாத புதிய பொருளுணர்ச்சியை அவை பெற்று நிற்கும்பொழுது தான் கவிஞன் அதனைக் காண்பான்;அந்த ஆற்றலையும்
அறிவான்
வெட்டியடிக்குது மின்னல் -கடல்
வீரத்திரை கொண்டு விண்ணையி
டிக்குது
கொட்டியிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்ணைக் குடையுது
காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனக்குது வானம்;
எட்டுத் திசையும் இடி-மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
அண்டம் குலுங்குது தம்பி!-தலை
ஆயிரம் தூக்கிய சேடனும்-பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான்-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
கெண்டு புடைத்திடுகின்றார்-என்ன
தெய்வீகக் காட்சியை கண் முன்பு
கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண் முன்பு
கண்டோம்
என்ற பாரதியாரின் பாடலில் பயின்று வந்துள்ள சொற்கள் நாம் யாவரும் அறிந்தவையே.ஆயினும் அவற்றின் அமையும்,ஒலியும்,பொருளும் ஒரு
பெரும் புயலையே நம் கண்முன் காட்டுவனவாக உள்ளன.இங்ஙனமே
'ஊழிக் கூத்து'என்ற பாடலில் உள்ள சொற்களும் 'பிரளய காலத்தையே' நம்
கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக