தேர்வுகள் எழுதிப் பட்டங்கள் பெற்று விட்டால் ,செய்யுள் கற்பிக்கும் தகுதி தமக்கு வந்து விட்டது என்று ஆசிரியர்கள் கருதுவது தவறு.தேர்வு எழுதித் தகுதி பெறும் நிலை வேறு;கவிதைகளை உணரும்நிலை வேறு;கவிதைகளை நாளிதழ்களில் செய்திகளைப் படிப்பது போன்று படிப்பதால் பயனில்லை.
வெறும் செய்திகளைக் கூறும் நாளிதழ் நிருபர் நிலை வேறு;உணர்ச்சிகளாகச் சித்தரித்துக் காட்டும் பெருங் கவிஞனின் நிலை வேறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக