செவ்வாய், 28 டிசம்பர், 2010

கவிதை நோக்கம்

கவிதை  கற்பித்தலிலும்  இத்தகைய சிறந்ததொரு  குறிக்கோளை  வகுத்துக் கொள்ள வேண்டியது  தாய் மொழியாசிரியர்களின்  தலையாய  கடமையாகும்.
கவிதையைப் பயிற்றலே  தாய் மொழிப் பாடத்தில்  உயிர் நிலை  போன்ற  பகுதியாகும்.

                      தாய் மொழி  பயிற்றலில்  கவிதைப் பகுதியே உயர்ந்தது.கவிதைப் பகுதி தேனாய் இனிப்பது.கவிதையென்பது  செங்கரும்பாய்  தித்திப்பது.
இத்தகைய இனிமைத் தன்மையுடைய  கவிதைப் பகுதியைக் கற்பிப்பதில்  வெற்றி காணும்  தாய் மொழியாசிரியர்  தம்முடைய  துறையின்  ஏனைய  பகுதிகளிலும்  வெற்றியடைவார் என்பது  திண்ணம்.
                                கவிதை  ஒரு  கலை.கல்வி நிலையங்களில்  மாணாக்கர்களின்
முருகுணர்ச்சியை  வளர்ப்பதற்காகவும்,இயற்கை அழகில்  இன்புறுவதற்காகவும்  கவிதைப் பகுதி  பாடத்திட்டத்தில்  சேர்க்கப் பெறுகின்றது.இவ்விரு  நோக்கங்கட்கு  மேலும்  கவிதை  பல  விளைவுகளை   உண்டாக்குகின்றது  என்பது  உண்மையே.கவிதை  அழகு  தருவதுடன்  நின்று  விடுவதில்லை.
வாழ்க்கை  பற்றிய  நீண்ட  உண்மைகளையும்  தருகின்றது.வாழ்க்கையைப் பற்றிய  திறனாய்வு  தானே  கவிதை?

1 கருத்து: