மோனை ஆங்கிலக் கவிதைகள் பலவற்றில் இல்லை.அதை அவர்கள் அவ்வளவு அவசியம் என்று கருதுவதில்லைதமிழிலோ மோனை இல்லாத பாடல்களே இல்லை என்று கூறலாம்.
கவிதைச் சுவையில் ஈடுபடுவோர் கவிதையில் அமைந்துள்ள குறிப்புப் பொருள்களை நுணுகி அறியும் ஆற்றலைப் பெறுவாராயின் ,கவிதை அனுபவம் மிகவும் சிறக்கும்;கவிதைகளை மெய் மறந்து சுவைக்கும் பழக்கமும் ஏற்படும்.
.
கவிதையைக் கவனித்துப் படிப்போருக்கு இன்பத்தை அளிப்பது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி.அவ்வுணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும் பொழுது பொங்கி வரும் இன்பத்தைத் தான் தமிழ் இலக்கண நூலார் மெய்ப்பாடு என்ற சொல்லால் குறித்தனர்;வடமொழியார் இதனை 'ரஸம்' என்று வழங்குவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக