வாழ்க்கையிலும்,மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கமாகும்.
''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்''என்ற உயர்ந்த குறிக்கோள் கவிதைத்துறையில் எளிதாக நிறைவேறுகிறது.கவிஞனின் மனத்தில் தோன்றிய அனுபவமே கவிதையாக முகிழ்க்கின்றது.வடிவம் கொள்ளுகின்றது.
கவிதையைப் படிக்கும் நாமும் அக்கவிஞன் பெற்ற அனுபவத்தையே பெற்று விட்டால்,கவிதையும் உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி விடும் நிலையை அடைந்து விடுகின்றது.
உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே பெற வைக்கின்றன.அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மைகளை உணர்த்துகின்றன.
''நற் கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து,பால் கலந்து செழுங்கனித்
தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல்
இனிப்பதுவே!''
என்று வள்ளலார் பாடுகின்றார் ,திருவாசகத்தைக் குறித்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக