வாழ்க்கை இயக்கமாக நடைபெறுகின்றது;அங்ஙனமே வாழ்க்கையிலிருந்து
மலரும் இலக்கியமும் இயக்கமாகவே அமைகின்றது.
இயற்கையும்,ஒலி நயமும்
ஐம் பெரும் பூதங்களின் இயக்கமும் ஒருவித ஒலி நயத்தில் தான் அமைந்திருக்கின்றது.அணுவிலிருந்து,அண்டம் வரை இவ்வுண்மையைக்
காணலாம்.
ஒலி நயத்திற்குப் புலன்களைத் திருப்பி விடும் ஆற்றல் உண்டு.
இன்னிசைக் கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய கண்,
காது முதலான புலன்கள் வெளியுலகப் பொருள்களில் ஈடுபடாமல் அமைதி பெறுகின்றன.
உறக்கத்தில் உள்ளம் இன்பம் அடைந்து ஓர் அமைதி பெறுவதைப் போலவே,பாட்டின் கற்பனை உலகத்திலும் உள்ளம் இன்புற்று அமைதியைக்
காண்கிறது.பாட்டின் ஒலிநயமும் உள்ளத்தை மயக்கி நம்மைக் கற்பனை உலகத்திற்கு ஈர்த்துச் செல்கின்றது.
ஒரு குழந்தையை தூங்க வைப்பதற்குத் தாய் மேற்கொள்ளும் முயற்சிகள் ஈண்டுச் சிந்திக்கற்பாலவை.
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!
மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!
கண் உறங்கு !கனியே உறங்கிடுவாய் !!
என்ற தாலாட்டுப் பாடலைப் பாடித் தொட்டிலை ஆட்டுவாள் ;பாட்டின் ஒலிநயத்தை குழந்தை உணரத் தொடங்கியவுடன் குழந்தை உறக்கத்தில் ஈடுபடத் தொடங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக