கவிதையில் இவமையாக வரும் பொருள் சிறப்புடையதாகவும்,உயர்ந்த கருத்தைத் தருவதாகவும் இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் தொல்காப்பியனார் ,
'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை'' என்று வரையறுத்துள்ளார்.
பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதி எழில் காட்டும்
கட்டத்தில்,
பார் ;சுடர்ப் பரிதியைச் சூழவே
படர் முகில்
எத்தனை தீப்பட்டு எரிவன!ஓகோ!
என்னடீ இந்த வண்ணத்து இயல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!செழும் பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள் !வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத் தீவுகள் !-பாரடீ!
நீலப் பொய்கைகள் !அடடா!நீல
வண்ணம் ஒன்றில் எத்தனை வகையடீ!
என்ற கவிதைப் பகுதியில் அந்தி வானத்தில் பொன் ஒடைகள்,தங்கத் தீவுகள்,நீலப் பொய்கைகள் போன்ற காட்சிகள் காட்டப் பெறுகின்றன.இவை யாவும் உருவகங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக