சொல் வளம் என்றவுடன் நிகண்டுகள் அல்லது அகராதியிலுள்ள சொற்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டு அவற்றைக் கவிஞன் தன் கவிதைகளில் ஆளுதல் என்று கருதுதல் தவறு.
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிய மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
சொல்வோன் குறிப்பால் பெறுவது ;
சொற்கள் பொருளை என்ன தான் தெரிவித்த போதிலும்மனத்திலுள்ள கருத்துக்கள் யாவும் சொற்களில் அடங்கிவிடும் என்று கூற இயலாது.ஆனால்,கவிதையில் பயின்று வரும் சொற்கள் பொருட் செறிவு மிக்கவை.காரணம்,அவை ஏற்கனவே பல கவிதைகளில் பயன்படுத்திய கற்பனைச் செறிவும்,பொருள் வளமும் உடையவையாக உள்ளன.சொற்கள் பொருளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் தெரிவிக்கின்றன.பழக்கத்திலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இத்தன்மை உண்டு.இதன் அளவையும் ஓரளவு அறுதியிட்டு விடலாம்.நாள் தோறும் நாம் வழங்கிவரும் சொற்கள் கூட இவ்வாற்றலைப் பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக