கவிதை முருகுணர்ச்சியை நல்குவது.எங்கெல்லாம் அழகு இருக்கின்றதோ அங்கெல்லாம் கவிதை தோன்றும்.நக்கீரர் தாம் உணர்ந்த அழகைப் பொதுமுறையில் திருமுருகாற்றுப் படையில் பாடி மகிழ்ந்தார்.அதில் அவர் அழகின் இயல்பை''கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு''என்று சுட்டி உரைத்துள்ளார்.
இவ்வாறு உணர்வு நிலையை நிலைபேறாக் குவித்து நம்மால் அளந்தறிய முடியாத பெரும்பயனை நல்க வல்லவை அழகுணர்ச்சி பொதிந்துள்ள கவிதைகள்.இத்தகைய கவிதைகளைப் படித்துத் துய்த்தல் மிகவும் இன்றியமையாதது.இளைஞர்களையும் இவற்றில் ஈடுபடச் செய்வது மிகவும் வேண்டப் படுவதொன்று.
பால் கறந்த மாத்திரையே யுண்பார்க்குஞ் சுவை பயக்குமாயினும்,அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின் உண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும்,முற்றின கருப்பங் கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும் மேலும் அதனைப் பாகு திரளக் காய்ச்சிச் சர்க்கரைக் கட்டியாக எடுத்துணிபார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும்,உரையும் நலம் பயப்பதொன்றாயினும் அதனைக் காட்டிலும் பாட்டாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம்.
சனி, 30 அக்டோபர், 2010
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
இயற்கை இன்பம்
கவிதைக்கு இலக்கணம் காணத் துணிவதை விட ஒரு நல்ல கவிதையை எடுத்துக்காட்டி''இது போலிருப்பது தான் கவிதை''!என்று கூறுவது எளிது ;பொருத்தமானதுங் கூட.
அழகின்பத்தை அனுபவித்த பாரதி,
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள்
இறைவா!இறைவா!இறைவா!
சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்குச்
சேரும் ஐம்பூதமதில் வியனுலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்
ஆகப் பலப்பலநல் அழகுகள் சமைத்தாய்
என்று கூறிக் களிக்கிறான்.
கவிதை என்பது காணும் பொருள்களை வருணிப்பதில் இல்லை.அப் பொருள்களைக் காணுங்கால் அவனுடம் எழும் மனநிலையில் தான் உள்ளது.அந்த மனநிலைக்கு ஒரு வடிவம் கொடுத்து அழகிய சொற்களால் ஓவியமாக அமைப்பதே கவிதையாகும்.அக்கவிதையைப் படிக்கும் நம்மிடத்திலும் அதே மனநிலையை உண்டாக்க வல்லது கவிதை.திருக் குற்றால மலைக்கு நாம் எத்தனையோ முறை போயிருக்கின்றோம்.பல இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டுத் திளைத்திருக்கின்றோம்;ஒரு வகையனுபவத்தையும் பெற்றிருக்கின்றோம். குமர குருபர அடிகள் பெற்ற அனுபவம் இது,
சிங்கமும் வெங் களிறுமுடன்
விளையாடும் ஒரு பால்;
சினப் புலியும் மடப்பிணையும்
திளைத்திடும் அங்கொருபால்
வெங்கரடி மரையினொடும்
விளையாடும் ஒருபால்;
விட அரவும் மட மயிலும்
விருந்தயரும் ஒரு பால்.
இருப்பதை விட இருக்க வேண்டியதைக் கூறுகின்றார்.அவர் காணும் காட்சியினை நாம் காணும் பொழுது எல்லையற்ற இன்பத்தைத் துய்க்கிறோம்.
குற்றாலத்தில் தங்கும் பொழுதெல்லாம் தேனருவியைப் பார்க்கின்றோம்.அதன் திரைகள் வானின் வழி ஒழுகுகின்ற வண்ணக் காட்சியையும் காண்கின்றோம்.கவிஞர் அதைக் காணும் விதம்
தேனருவித் திரையெழும்பி
வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும்
தேர்க் காலும் வழுகும்
இயற்கையின் இன்ப ஊற்றாக கவிதை திகழ்கிறது.
.

கவியின்பம்
சீதா பிராட்டியின் அழகை வருணிக்கப் புகுந்த கம்ப நாடன் பொன்னின் சோதி போதின் நாற்றம்,தேனின் தீஞ்சுவை என்று ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்க்கிறான்.ஒன்று கூட அவன் சீதையைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தை வெளியிடும் ஆற்றல் பெறவில்லை.இறுதியில் ,'செஞ்சொற் கவியின்பம்' என்று சொல்லி மனநிறைவு பெறுகிறான்.
உள்ளத்திலுள்ளவற்றை உணர்ச்சி பொங்கத் தெள்ளத் தெளிந்த சொற்களால் எடுத்துரைப்பது தான் கவிதையாகும்.
கவிமணியவர்களும்,
உள்ளத்துள்ளது கவிதை-இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை
தெளிந்துரைப்பது கவிதை
என்று கவிதைக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
நன்னூலாசிரியரும்,
பல்வகைத் தாதுவின்
உயிர்க்(கு) உடல் போல்,பல
சொல்லால் பொருட்(கு) இட
னாக உணர்வின்
வல்லோர் அணி பெறச்
செய்வன செய்யுள்
என்று கவிதையை வரையறுக்கின்றார்.

சனி, 23 அக்டோபர், 2010
கவிதையின் இலக்கணம்
கவிதை என்றால் என்ன? வினா மிகவும் எளியது தான்,ஆனால் அதற்கு விடையிறுப்பதோ மிகவும் கடினம்.கவிதையின் இலக்கணத்தை மேற்புல அறிஞர்கள் வரையறுத்துக் கூற முயன்றிருக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் வெற்றியடையவில்லை.கவிதையென்பது ஒலிநயம் அமைந்த அமைந்த சொற்களின் கட்டுக்கோப்பு;அஃது இன்பத்தை உண்மையுடன் இணைப்பது; அறிவுக்குத் துணையாக கற்பனையைக் கொண்டிருப்பது என்பது ஜான்ஸன் என்பாரின் கூற்று.கார்லைல் என்பார்,''இசை தழுவிய எண்ணமே கவிதை''.என்று வரையறுக்கின்றார்.
''மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்டவல்லதும் செம்மை நிறைந்த கூற்றே கவிதையாகும்''இது மாத்யூ அர்னால்டு கவிதைக்குக் கூறும் இலக்கணம்.
''மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்டவல்லதும் செம்மை நிறைந்த கூற்றே கவிதையாகும்''இது மாத்யூ அர்னால்டு கவிதைக்குக் கூறும் இலக்கணம்.
புதன், 20 அக்டோபர், 2010
கவிதையின் சிறப்பு
கவிதை ஓர் அரிய கலை.நுண்ணிய கலை.கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புத சாதனம்.கவிதையனுபவம்.அது கூறும் பொருளில் இல்லை.கூறும் முறையில் தான் இருக்கிறது.கவிஞன் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெற வேண்டும் என்று எண்ணிச் சில யுக்தி முறைகளைக் கையாண்டு கவிதையைப் படைக்கிறான்.அந்த யுக்தி முறைகளால் உணர்ச்சியை அதில் பொதிய வைக்கிறான்.
கற்பனை,சொற்களின் அமைப்பு முறை,ஒலி நயம்,யாப்பு முறை,அணி நலன்,தொடை நயம்,குறிப்புப் பொருள்,சுவைகள் போன்ற சில முறைகளை மேற்கொண்டு கவிதையைப் படைக்கிறான்.கவிதையைப் படிக்க வேண்டிய முறையில் இவை தோன்றுமாறு படித்தால் கவிஞன் பெற்ற அனுபவத்தையே நாமும் பெறுகிறோம்.கவிஞன் மேற்கொள்ளும் யுக்திமுறைகளையெல்லாம் ஓரளவு விளக்கமாக எடுத்தியம்புவது கவிதையின் சிறப்பு.

செவ்வாய், 19 அக்டோபர், 2010
கவிதையின் கொடுமுடி
கவிதையனுபவத்தின் கொடுமுடி;
உந்து மதகளிற்றன் ,ஓடாத தோள்வலியன்
நன்தகோ பாலன் மருமகளே,நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ!கடை திறவாய் ;
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் ;மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி !உன் மைத்துனர் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தெலோ ரெம்பாவாய்
என்று நப்பின்னைப் பிராட்டியை எழுப்பும் பாசுரத்தின் சொற்களுக்கும்,சொற்றொடர்களுக்கும் குறிப்புகள் திருப்பாவையில் உள்ளது.சொற்களின் கட்டுண்ட சாயல்களும்,விடுதலைச் சாயல்களும் ,பக்தியனுபவம் போன்றவையும் கவிதையனுபவத்தின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்தியிருப்பதை அறியலாம்.
ஐந்தாம் நிலை;
கவிதையிலுள்ள காட்சியை மனக் கண்ணால் கண்டதாலும்,அந்தக் காட்சியைக் காட்டிய பாடலின் ஒலி நயத்தாலும்,உள்ளத்தில் ஏற்படும் கிளர்ச்சி.
ஆறாம் நிலை;
அந்த உள்ளக் கிளர்ச்சியால் ஏற்படும் மனப்பான்மை.இதில் தான் கவிதையனுபவம் முழுமைநிலை எய்துகின்றது.

வெள்ளி, 15 அக்டோபர், 2010
அடுத்த நிலைகள்
மூன்றாம் நிலை;
இரண்டாம் நிலையில் சொற்களோடு தொடர்புற்றுச் சாயல்கள் மனக்கண் முன் தோன்றின.இங்கு ,சொற்களின் தொடர்பின்றியே மனக்கண்ணில் அந்தச் சாயல் புலப்படவேண்டும்.
சொற்கள் சொற்களாக ஒலிக்கும் நிலை மாறி,அந்தப் பொருள்களே மனக்கண்ணில் தோன்றி விளங்க வேண்டும்.
கவிதை நுகர்ச்சியில் ஈடுபடும் பலரும் ஒரேவித சாயல்களையே பெறுகின்றனர் எனக் கருதுதல் தவறு.
நான்காம் நிலை
இதற்கு முன்னர் வாழ்க்கையிலும்,கவிதைகளிலும் பெற்ற அனுபவங்களின் நினைவுகள் நாம் படிக்கும் கவிதைகளோடு சேர்ந்து நிற்றல்.
ஒரு கவிதையைப் படிக்கும் பொழுது அக்கவிதையிலுள்ள சொற்கள் உணர்த்தும் கருத்தினை முதலில் பெறுகிறோம்.ஆனால்,இதனைத் தவிர, நம்மிடம் தோன்றும் பிற எண்ணங்கள் ஏன்?எண்ணக் கோவைகள் கூட மிக முக்கியமானவை .இவை கேள்விப் புலச் சொற்சாயலால் ஏற்படலாம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)