திங்கள், 6 ஜூன், 2011

நாலும்......தொடர்ச்சி


யுகங்கள்   -கிரேதா ,திரேதா ,துவாபர ,கலி
வேதம்     -ரிக்,யஜீர்,சாமம் ,அதர்வணம்
படைகள்   -தேர்,கரி,பரி,காலாள்
அளவைகள் –எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்
உபயங்கள்  -சாமம்,பேதம்,தானம்,தண்டம்
சங்குகள்    -இடம்புரி,வலம்புரி,சலஞ்சலம்,பாஞ்சசன்யம்
நூற்பயன்  -அறம் ,பொருள் ,இன்பம் ,வீடு
பாவகை   -வெண்பா ,ஆசிரியப்பா ,கலிப்பா ,வஞ்சிப்பா
புண்ணியம் –தானம் ,கல்வி ,தவம் ,ஒழுக்கம்
கதிகள்    -தேவகதி ,மக்கட் கதி ,விலங்கு கதி ,நரகதி.

நாலும் தெரிந்தவரா நீங்கள்!


ஆஸ்ரமங்கள்  -பிரம்மச்சர்யம்,கிரகஸ்தம்
                வானப்பிரஸ்தம்,சந்நியாசம்
சமயகுரவர்    -சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர்,மாணிக்கவாசகர்
பெண்டிர் குணம் –அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு
ஆடவர் குணம் –அறிவு ,நிறை ,காப்பு ,கடைப்பிடி
பெண்டிர்      -பத்மினி ,சிந்தினி ,சங்கினி ,அஸ்தினி
அரண்      -காடு ,மலை ,நீர் ,மதில்
பொன்     -சாதரூபம் ,கிளிச்சிறை ,ஆடகம் ,சாம்பந்தம்
பூ         -கொடி ,கோடு ,நீர் ,நிலம்
சொல்    -பெயர் ,வினை ,இடை ,உரி
திசை    -கிழக்கு ,மேற்கு ,வடக்கு ,தெற்கு.
நாற்பால்  -அரசர் ,அந்தணர் ,வணிகர் ,வேளாளர்.

சான்றோர்களின் சிறப்புப் பெயர்கள்


மொழி  ஞாயிறு        -தேவநேயப் பாவாணர்
கிறிஸ்துவக் கம்பன்     -எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
பதிப்புச் செம்மல்        -ஆறுமுக  நாவலர்
சிறுகதை  மன்னன்     -புதுமைப் பித்தன்
மகா வித்துவான்       -மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழ் மாணவர்        -போப்  ஐயர்
உரையாசிரியர்         -இளம் பூரணர்
கவி ராட்சசன்         -ஒட்டக் கூத்தர்
திராவிட சாஸ்திரி     -சூரிய நாராயண சாஸ்திரி

வெள்ளி, 3 ஜூன், 2011

பாரதி

                                       எண்ணிய   முடிதல்   வேண்டும்
                                       நல்லவே     எண்ணல்   வேண்டும்
                                       திண்ணிய    நெஞ்சம்     வேண்டும்
                                       தெளிந்த     நல்லறிவு      வேண்டும்
                                       பண்ணிய   பாவம்    எல்லாம்
                                       பரிதி   முன்  பனியே  போல
                                       நன்னிய   நின்முன்   இங்கு
                                       நசித்திடல்   வேண்டும்  அன்னாய்!


புதன், 1 ஜூன், 2011

கம்ப ரசம்

       
                                        தயரதன்   புதல்வன்   என்பார்
                                        தாமரைக்  கண்ணன்  என்பார்
                                       புயல்இவன்  மேனி     என்பார்
                                       பூவையும்  பொருவும்  என்பார்
                                      மயல்   உடைத்து   உலகம்  என்பார்
                                      மானிடன்  அல்லன்  என்பார்
                                      கயல்பொரு  கடலுள்  வைகும் ;
                                      கடவுளே  காணும்   என்பார்.




                                    
                                     தோள்    கண்டார்    தோளே  கண்டார்;
                                     தொடு    கழல்    கமலம்  அன்ன
                                     தாள்     கண்டார்   தாளே   கண்டார்
                                     தடக்கை   கண்டாரும்  அஃதே
                                     வாள்   கொண்ட  கண்ணார்   யாரே
                                     வடிவினை   முடியக்
                                                               கண்டார்?                   
                                    ஊழ்   கொண்ட  சமயத்து  அன்னான்
                                   உருவு    கண்டாரை    ஒத்தார்.



                                 பஞ்சிஒளிர்   விஞ்சுகுளிர்  பல்லவம்
                                                                    அனுங்கச்
                                 செஞ்செவிய  கஞ்சம்  நிகர்,சீறடியன்  ஆகி
                                 அஞ்சொல்  இளமஞ்ஞை  என,அன்னம்
                                                                               என மின்னும்
                                 வஞ்சி என,நஞ்சம் என வஞ்ச மகள்
                                                                              வந்தாள்