புதன், 1 ஜூன், 2011

கம்ப ரசம்

       
                                        தயரதன்   புதல்வன்   என்பார்
                                        தாமரைக்  கண்ணன்  என்பார்
                                       புயல்இவன்  மேனி     என்பார்
                                       பூவையும்  பொருவும்  என்பார்
                                      மயல்   உடைத்து   உலகம்  என்பார்
                                      மானிடன்  அல்லன்  என்பார்
                                      கயல்பொரு  கடலுள்  வைகும் ;
                                      கடவுளே  காணும்   என்பார்.




                                    
                                     தோள்    கண்டார்    தோளே  கண்டார்;
                                     தொடு    கழல்    கமலம்  அன்ன
                                     தாள்     கண்டார்   தாளே   கண்டார்
                                     தடக்கை   கண்டாரும்  அஃதே
                                     வாள்   கொண்ட  கண்ணார்   யாரே
                                     வடிவினை   முடியக்
                                                               கண்டார்?                   
                                    ஊழ்   கொண்ட  சமயத்து  அன்னான்
                                   உருவு    கண்டாரை    ஒத்தார்.



                                 பஞ்சிஒளிர்   விஞ்சுகுளிர்  பல்லவம்
                                                                    அனுங்கச்
                                 செஞ்செவிய  கஞ்சம்  நிகர்,சீறடியன்  ஆகி
                                 அஞ்சொல்  இளமஞ்ஞை  என,அன்னம்
                                                                               என மின்னும்
                                 வஞ்சி என,நஞ்சம் என வஞ்ச மகள்
                                                                              வந்தாள்


2 கருத்துகள்:

  1. இதைப் பார்த்துத் தானே கண்ணதாசன் தோள் கண்டேன் தோளே கண்டேன் என்று கவிதை எழுதினார்...நன்று. மகிழ்ச்சி. நான் நினைக்கிறேன் நீங்கள் ஒரு தடவை எனக்கு கருத்திட்டீர்கள் என்னால் உங்கள் வலையைப் பிடிக்க முடியவல்லை. இன்று பிடித்து விட்டேன்.வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க
    நன்றி பகிர்வுக்கு ..........முடிந்தால் வாருங்கள் என்
    தளத்திலும் புதிய பாடல்வரி காத்திருக்கின்றது .......

    பதிலளிநீக்கு