வியாழன், 30 டிசம்பர், 2010

தமிழாசிரியரின் பங்கு

தமிழ் எழுச்சி கரை புரண்டு ஓடும் இக்காலத்தில் ,
                                           வளர் பிறை போல் வளர்ந்த
                                                  தமிழரில் அறிஞர் தங்கள்,
                                           உளத்தையும், உலகில் ஆர்ந்த
                                                   வளத்தையும் எடுத்துச்
                                                    சொல்லால்
                                            விளக்கிடும் இயல் முதிர்ந்தும்
                                                 வீறு கொள் இசையடைந்தும்
                                              அளப்பிலா உவகை ஆடற்
                                                      றமிழே நீ என்றன் ஆவி
                                                        
                            தமிழ் மக்களுக்குத் தமிழே
இன்று உயிர் போல் திகழ்கின்றது.இன்று தமிழ் இனத்தை ஒன்று படுத்துவதற்குத் தமிழ் போல் வேறு சிறந்த கருவி இல்லை எனலாம்.




இன்று தமிழ் மக்கள்,
                                                ''கன்னற்
                          பொருள் தரும் தமிழே நீ ஓர்
                          பூக்காடு ; நானோர் தும்பி''
 என்று கூறி தமிழ்க் கவிதைகளைச் சுவைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இதன் விளைவாகத் தமிழ் நாட்டில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் 'கவியரங்கம்'ஒரு முக்கியக் கூறாக அமைந்திருப்பதைக் காணலாம்.இந்த நிலையில் தமிழாசிரியர்கள் கவிதையிலுள்ள அழகை எடுத்துக் காட்டி,அதன் மூலம் கவிதையிலுள்ள உண்மையினை உணரச் செய்வது எவ்வளவு இன்றியமையாதது.

கவிதையைத் தேர்ந்தெடுத்தல்

திறனாய்வாளரின் குறிப்புக்கள்;
திறனாய்வாளர்கள் கவிதையைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்கள் கவிதைகளை
உணர்வதற்கு பெருந்துணை செய்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை.சில
பாடல்களை இக்குறிப்புகளின்றிச் சரியாக உணரவும் முடிவதில்லை.

பேராசிரியர்,நச்சினார்க்கினியர்,பரிமேலழகர்,அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் விட்டுச் சென்றுள்ள குறிப்புகள் இல்லையாயின், தமிழ் இலக்கியத்திலுள்ள பல அருமையானபாடல்களின் கருத்துக்களை நன்கு புரிந்து
கொள்ள முடியாது.
                                        சாதாரணமாகப் பொருள் வெளிப்படையாக உள்ள பாடல்கள்
என்றாலும்,அவர்களுடைய உரைகளால் புது மெருகுடன் பொலிகின்றது.

                                                                                                          
                              '
இயற்கை அழகை வருணிக்கும் பாடல்கள்;
தமிழ் மொழியில் இயற்கை அழகினை வருணிக்கும் எண்ணற்ற பாடல்கள் உள்ளன.பாரதியாரின் பாடல்கள் சிலவற்றைக் காண்போம்,
                           பாரடியோ வானத்திற் புதுமையெல்லாம்
                                    பண்மொழி!கணந்தோறும் மாறி மாறி
                          ஓரடி மற்றோரடியோ டொத்த லின்றி
                                     உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி;

செவ்வாய், 28 டிசம்பர், 2010

கவிதைகளை உணரும் நிலை

தேர்வுகள்  எழுதிப்  பட்டங்கள்  பெற்று விட்டால் ,செய்யுள்  கற்பிக்கும்  தகுதி  தமக்கு  வந்து விட்டது  என்று  ஆசிரியர்கள்  கருதுவது  தவறு.தேர்வு  எழுதித்  தகுதி  பெறும்  நிலை  வேறு;கவிதைகளை  உணரும்நிலை  வேறு;கவிதைகளை   நாளிதழ்களில்  செய்திகளைப்  படிப்பது  போன்று  படிப்பதால்  பயனில்லை.
வெறும்  செய்திகளைக்  கூறும் நாளிதழ் நிருபர் நிலை  வேறு;உணர்ச்சிகளாகச் சித்தரித்துக் காட்டும்  பெருங் கவிஞனின்  நிலை  வேறு.

கவிதை நோக்கம்

கவிதை  கற்பித்தலிலும்  இத்தகைய சிறந்ததொரு  குறிக்கோளை  வகுத்துக் கொள்ள வேண்டியது  தாய் மொழியாசிரியர்களின்  தலையாய  கடமையாகும்.
கவிதையைப் பயிற்றலே  தாய் மொழிப் பாடத்தில்  உயிர் நிலை  போன்ற  பகுதியாகும்.

                      தாய் மொழி  பயிற்றலில்  கவிதைப் பகுதியே உயர்ந்தது.கவிதைப் பகுதி தேனாய் இனிப்பது.கவிதையென்பது  செங்கரும்பாய்  தித்திப்பது.
இத்தகைய இனிமைத் தன்மையுடைய  கவிதைப் பகுதியைக் கற்பிப்பதில்  வெற்றி காணும்  தாய் மொழியாசிரியர்  தம்முடைய  துறையின்  ஏனைய  பகுதிகளிலும்  வெற்றியடைவார் என்பது  திண்ணம்.
                                கவிதை  ஒரு  கலை.கல்வி நிலையங்களில்  மாணாக்கர்களின்
முருகுணர்ச்சியை  வளர்ப்பதற்காகவும்,இயற்கை அழகில்  இன்புறுவதற்காகவும்  கவிதைப் பகுதி  பாடத்திட்டத்தில்  சேர்க்கப் பெறுகின்றது.இவ்விரு  நோக்கங்கட்கு  மேலும்  கவிதை  பல  விளைவுகளை   உண்டாக்குகின்றது  என்பது  உண்மையே.கவிதை  அழகு  தருவதுடன்  நின்று  விடுவதில்லை.
வாழ்க்கை  பற்றிய  நீண்ட  உண்மைகளையும்  தருகின்றது.வாழ்க்கையைப் பற்றிய  திறனாய்வு  தானே  கவிதை?

பாவும்,பண்பும்

தமிழ்க் கவிதைகளில் பெரும்பான்மையானவை பயிலும்போது இன்பம் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால்,அவை படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதாக உள்ளன.
                                              காவியங்கள் உண்மைகளை உணர்த்துபவை.கவிஞன் காட்டும் வாழ்க்கையும் ,குறிக்கோள் தன்மையுடையதே.வாழ்க்கை எவ்விதம் அமைந்தால்  நலம் என்று  கவிஞன் கருதுகிறானோ,அங்ஙனமே அக்குறிக்கோளையும் ஆக்குகிறான்.அதற்கேற்றவாறு கவிதைகளையும் தொடுக்கின்றான்.நம் நாட்டுக் காவியங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே  எழுந்தவை.
                                  'நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம்' தமிழில் தோன்றிய தலை சிறந்த கவிதைகளில் ஒன்று.சிலம்பு காரணமாக எழுந்த அக்கதையை உலகோர் புகழும் பெருங்காப்பிய வடிவில் இளங்கோவடிகள் ஆக்கித் தந்துள்ளார்.மூன்று பெரு நீதிகளை அடிப்படையாகக் கொண்டு நூல் இயங்குகிறது.
                            ''அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதும்
                              உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
                              ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
                             சூழ்வினைச் சிலம்பு  காரண   மாகச்
                             சிலப்பதிகாரம்  என்னும் பெயரால்
                             நாட்டுதும்  யாமோர்  பாட்டுடைச் செய்யுள்''
                                           வாழ்க்கையின்  உயர்ந்த  அடிப்படை  உணர்ச்சிகளாக     உள்ள  அன்பு,வீரம்,காதல்,தியாகம் போன்ற பண்புகள் அமைந்துஅவற்றின் வாயிலாக உயிர்கள்  எல்லாவற்றுடனும் இயைந்து உணரும் விழுமிய அனுபவம் பெறத்தக்கதாக விளங்கினால் தான்  கவிதை சிறந்த ,நிலைத்த இன்பம் தருவதாகின்றது.இந்த விழுமிய உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த கவிதைதான் பெருங்கவிதை என்ற நிலையையும் அடைகின்றது.
கவிஞன் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு கவிதையைப் படைக்க முடியாது.அப்படிப் படைக்க முயன்றாலும் அக்கவிதை தான் விரும்பியபடி அமையாது.
                                  ஆனால்,தான் பெற்ற  விழுமிய  உணர்ச்சியை-அனுபவத்தை-பிறரும்  பெற வேண்டும்  என்ற நோக்கம் மட்டிலும் கவிஞனிடம் இருந்தால்,
கவிதை தானாக கவிஞனின் விருப்பம் போல் நன்கு அமைந்து விடும்.தமிழ்க் கவிதைகள் பெரும்பாலும் அறங் கூறும் இயல்பும்,கவிதை இயல்பும் கொண்டே திகழ்கின்றன.

திங்கள், 27 டிசம்பர், 2010

கவிதை உணர்த்தும் உண்மை

வாழ்க்கையிலும்,மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூறுவதே கவிதையின் நோக்கமாகும்.
''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்''என்ற உயர்ந்த குறிக்கோள் கவிதைத்துறையில் எளிதாக நிறைவேறுகிறது.கவிஞனின் மனத்தில் தோன்றிய அனுபவமே கவிதையாக முகிழ்க்கின்றது.வடிவம் கொள்ளுகின்றது.
                                        கவிதையைப் படிக்கும் நாமும் அக்கவிஞன் பெற்ற அனுபவத்தையே பெற்று விட்டால்,கவிதையும் உணர்த்த வேண்டியவற்றை  உணர்த்தி விடும் நிலையை அடைந்து விடுகின்றது.                                              
                                     உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே பெற வைக்கின்றன.அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மைகளை உணர்த்துகின்றன.
                                ''நற் கருப்பஞ் சாற்றினிலே
                                  தேன் கலந்து,பால் கலந்து செழுங்கனித்
                                                                           தீஞ்சுவை கலந்து
                                 ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல்
                                                                               இனிப்பதுவே!''
என்று வள்ளலார் பாடுகின்றார் ,திருவாசகத்தைக் குறித்து.

வியாழன், 23 டிசம்பர், 2010

மெய்ப்பாடு

மோனை ஆங்கிலக் கவிதைகள் பலவற்றில் இல்லை.அதை அவர்கள் அவ்வளவு அவசியம் என்று கருதுவதில்லைதமிழிலோ மோனை இல்லாத பாடல்களே இல்லை என்று கூறலாம்.
                                                  கவிதைச் சுவையில் ஈடுபடுவோர் கவிதையில் அமைந்துள்ள குறிப்புப் பொருள்களை நுணுகி அறியும் ஆற்றலைப் பெறுவாராயின் ,கவிதை அனுபவம் மிகவும் சிறக்கும்;கவிதைகளை மெய் மறந்து    சுவைக்கும் பழக்கமும் ஏற்படும்.
.
                                                             கவிதையைக் கவனித்துப் படிப்போருக்கு இன்பத்தை அளிப்பது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி.அவ்வுணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும் பொழுது பொங்கி வரும் இன்பத்தைத் தான் தமிழ் இலக்கண நூலார் மெய்ப்பாடு என்ற சொல்லால் குறித்தனர்;வடமொழியார் இதனை 'ரஸம்' என்று வழங்குவர்.

புதன், 22 டிசம்பர், 2010

அணி நலன்கள்

                                           கவிதையில் இவமையாக வரும் பொருள் சிறப்புடையதாகவும்,உயர்ந்த கருத்தைத் தருவதாகவும் இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் தொல்காப்பியனார் ,
                       'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை'' என்று வரையறுத்துள்ளார்.

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதி எழில் காட்டும்
கட்டத்தில்,        

                                   பார் ;சுடர்ப் பரிதியைச் சூழவே
                                                                        படர் முகில்
                                 எத்தனை தீப்பட்டு எரிவன!ஓகோ!
                                 என்னடீ இந்த வண்ணத்து இயல்புகள்!
                                 எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
                                 தீயின் குழம்புகள்!செழும் பொன் காய்ச்சி
                                 விட்ட ஓடைகள் !வெம்மை தோன்றாமே
                                 எரிந்திடும் தங்கத் தீவுகள் !-பாரடீ!
                                 நீலப் பொய்கைகள் !அடடா!நீல
                                 வண்ணம் ஒன்றில் எத்தனை வகையடீ!
என்ற கவிதைப் பகுதியில் அந்தி வானத்தில் பொன் ஒடைகள்,தங்கத் தீவுகள்,நீலப் பொய்கைகள் போன்ற காட்சிகள் காட்டப் பெறுகின்றன.இவை யாவும் உருவகங்கள்.

                                      

யாப்பு முறை

கவிதைகளில் சொற்களுக்கு ஒருவித வேகம் தந்து செழிக்க வைப்பது கவிஞனின் வேலை.
 
விருத்தம் ஒலிநயத்தைப் புலப்படுத்துவதில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.தமிழ் யாப்பு முறை தனக்கென உரிய சிறந்த அமைப்புகளைக்  கொண்டது;எளிமையும்,இனிமையும் உடையது.
                                   இந்த யாப்பு மிறை பாட்டைப் படிப்பவர்களை அப்பாட்டுடன் ஒன்றிவிடுமாறு செய்கிறது.
                                               ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
                                                       றமைத்தனன்  சிற்பிமற் றொன்றை
                                                ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
                                                        றுயர்த்தினான்;உலகினோர் தாய் நீ
                                                யாங்கணே எவரை எங்எனம் சமைத்தற்
                                                            கெண்ணமோ அங்ஙனம் சமைப்பாய்
                                               ஈங்குனைச் சரணென்றெய்தினேன் என்னை
                                                         இருங் கலைப் புலவனாக்குதியே
என்ற பராசக்தி வணக்கப் பாடலை இசையேற்றிப் படிக்கும் போது நம் உள்ளம் அதில் ஒன்றி விடுகிறது.                              

செவ்வாய், 14 டிசம்பர், 2010

ஒலி நயத்தின் சிறப்பு

அச்சு வடிவத்தில் காணும் பாட்டு அரையுயிரோடுதான் உள்ளது.அதைப் பாடிய கவிஞர் நம்மிடையே இல்லையென்றாலும்,அவர் தம் பாட்டில் தம்முடைய முகக் குறிப்பையும்,கையசைவுகளையும்,இசையையும் விட்டுச் செல்லவில்லை;அங்ஙனம் விட்டுச் செல்லவும் இயலாது.
                                                                 ஆனால் ஒலி நயம்,கற்பனை,மோனை,எதுகை
போன்ற கூறுகளை அவற்றின் சாயல்களாக விட்டுச் சென்றுள்ளார்.அவருடைய உணர்ச்சியைப் பெற வேண்டுமானால் அச்சு வடிவத்தில் காணும் அவருடைய சொற்களிலிருந்து மட்டிலும் பெறுதல் இயலாது.கவிதையைப் பாடிய கவிஞன்
தான் விட்டுச் சென்ற சாயல்களிலுருந்து படிப்பவர் பாட்டை யாத்தவரின்
உணர்ச்சியை உண்டாக்குதல் வேண்டும்.
                                            

திங்கள், 13 டிசம்பர், 2010

ஒலி நயம்

வாழ்க்கை இயக்கமாக நடைபெறுகின்றது;அங்ஙனமே வாழ்க்கையிலிருந்து
மலரும் இலக்கியமும் இயக்கமாகவே அமைகின்றது.

இயற்கையும்,ஒலி நயமும்
ஐம் பெரும் பூதங்களின் இயக்கமும் ஒருவித ஒலி நயத்தில் தான் அமைந்திருக்கின்றது.அணுவிலிருந்து,அண்டம் வரை இவ்வுண்மையைக்
காணலாம்.
                                   ஒலி நயத்திற்குப் புலன்களைத் திருப்பி விடும் ஆற்றல் உண்டு.
இன்னிசைக் கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய கண்,
காது முதலான புலன்கள் வெளியுலகப் பொருள்களில் ஈடுபடாமல் அமைதி பெறுகின்றன.
 உறக்கத்தில் உள்ளம் இன்பம் அடைந்து ஓர் அமைதி பெறுவதைப் போலவே,பாட்டின் கற்பனை உலகத்திலும் உள்ளம் இன்புற்று அமைதியைக்
காண்கிறது.பாட்டின் ஒலிநயமும் உள்ளத்தை மயக்கி நம்மைக் கற்பனை உலகத்திற்கு ஈர்த்துச் செல்கின்றது.
                                         ஒரு குழந்தையை தூங்க வைப்பதற்குத் தாய் மேற்கொள்ளும் முயற்சிகள் ஈண்டுச் சிந்திக்கற்பாலவை.
                          அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
                          சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!
                          மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
                          காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!
                          கண் உறங்கு !கனியே உறங்கிடுவாய் !!
என்ற தாலாட்டுப் பாடலைப் பாடித் தொட்டிலை ஆட்டுவாள் ;பாட்டின் ஒலிநயத்தை குழந்தை உணரத் தொடங்கியவுடன் குழந்தை உறக்கத்தில் ஈடுபடத் தொடங்குகிறது.                                          

வெள்ளி, 10 டிசம்பர், 2010

கவிதை வடிவு

சில சொற்கள் உறவு கொள்ளும் முறையாலேயே புதிய ஒலியின்பத்தையும்,
புதிய பொருளுணர்ச்சியையும் தருகின்றன.அங்ஙனம் அமையும் முறை கவிதை
பாடும் கவிஞனுக்கே முதலில் புலனாவதில்லை.கவிதையாக வடிவெடுத்த பிறகு அகராதியில் இல்லாத புதிய பொருளுணர்ச்சியை அவை பெற்று நிற்கும்பொழுது தான் கவிஞன் அதனைக் காண்பான்;அந்த ஆற்றலையும்
அறிவான்
                                              வெட்டியடிக்குது மின்னல் -கடல்
                                              வீரத்திரை கொண்டு விண்ணையி
                                                                                                     டிக்குது
                                         கொட்டியிடிக்குது மேகம்-கூ
                                         கூவென்று விண்ணைக் குடையுது
                                                                                              காற்று;
                                        சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
                                       தாளங்கள் கொட்டிக் கனக்குது வானம்;
                                       எட்டுத் திசையும் இடி-மழை
                                       எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
                                      அண்டம்  குலுங்குது தம்பி!-தலை
                                      ஆயிரம் தூக்கிய சேடனும்-பேய் போல்
                                      மிண்டிக் குதித்திடுகின்றான்-திசை
                                      வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
                                      கெண்டு புடைத்திடுகின்றார்-என்ன
                                       தெய்வீகக் காட்சியை கண் முன்பு
                                                                                      கண்டோம்!

                                        கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
                                        காலத்தின் கூத்தினைக் கண் முன்பு
                                                                                             கண்டோம்
என்ற பாரதியாரின் பாடலில் பயின்று வந்துள்ள சொற்கள் நாம் யாவரும் அறிந்தவையே.ஆயினும் அவற்றின் அமையும்,ஒலியும்,பொருளும் ஒரு
பெரும் புயலையே நம் கண்முன் காட்டுவனவாக உள்ளன.இங்ஙனமே
'ஊழிக் கூத்து'என்ற பாடலில் உள்ள சொற்களும் 'பிரளய காலத்தையே' நம்
கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.                                

செவ்வாய், 23 நவம்பர், 2010

சொல் மதிப்பு

கவிதை  மதிப்புடைய  சொற்கள் ;
                            கவிதையில்  பயிலும்  சொற்களைத்  தனித்தனியாக  எடுத்துப்  பார்க்கும் பொழுது  அவை தரும் பொருள்  வேறு;அவை  ஏனைய  சொற்களுடன்  உறவு  கொண்டு  மனத்தில் படும் பொழுது  தரும்  பொருள்  வேறு.
எனவே ,கவிதையின்  முழுக் கருத்தையும்  உள்ளங் கொள்ளாமல்  சொற் பொருளை  மட்டும் ஆராய்தல்  பெருந்தவறு ;கவிதையில்  பயிலும்  சொற்களுக்கென்று  தனி  ஓசையும்  இல்லை ;பொருளும்  இல்லை ;பல  சொற்கள்  கவிதையில்  உறவு  கொள்ளும்  பொழுது தான்  அவை  பொருட் சிறப்பைப்  பெறுகின்றன.
                                   ஊர்,கேளிர்,யாதும்   என்ற  சொற்கள்  நாம்  அறிந்தவையே;
அகராதியில்  அவற்றிற்குப்  பொருள் எழுதப் பெற்றிருக்கும்.ஆனால்,கவிஞன் ஒருவன்,
                                     யாதும்  ஊரே ;யாவரும்  கேளிர்
என்று பாடிய பின்னர்  அச் சொற்றொடரின்  பொருளே  மாறிவிடுகிறது.அஃது  
உலக  சகோதரத்துவத்தை  உணர்த்துகின்றது.
சாதாரணச் சொற்கள் கூட  கவிதை வடிவு  பெறுங்கால்,ஒரு  தனிப்பட்ட  மதிப்பினைப் பெற்றுவிடுகின்றன.இம்மதிப்புடைய  சொற்கள்  உள்ளவை தாம்
கவிதைகள் ;இந்த மதிப்பைக் 'கவிதை மதிப்பு' எனக்  குறிப்பிடுவர்  திறனாய்வாளர்.

சொல் வளம்

சொல் வளம்   என்றவுடன்  நிகண்டுகள்  அல்லது  அகராதியிலுள்ள  சொற்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டு அவற்றைக் கவிஞன்  தன் கவிதைகளில் ஆளுதல் என்று கருதுதல் தவறு.
     
                                 பஞ்சியொளிர்  விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
                                 செஞ்செவிய  கஞ்சநிமிர்  சீறடிய ளாகி
                                 அஞ்சொலிய   மஞ்ஞையென  அன்னமென மின்னும்
                                 வஞ்சியென  நஞ்சமென வஞ்சமகள்  வந்தாள்

சொல்வோன் குறிப்பால் பெறுவது ;
சொற்கள் பொருளை என்ன தான் தெரிவித்த போதிலும்மனத்திலுள்ள கருத்துக்கள் யாவும் சொற்களில் அடங்கிவிடும் என்று கூற இயலாது.ஆனால்,கவிதையில் பயின்று வரும் சொற்கள் பொருட் செறிவு மிக்கவை.காரணம்,அவை ஏற்கனவே பல கவிதைகளில் பயன்படுத்திய கற்பனைச் செறிவும்,பொருள் வளமும் உடையவையாக உள்ளன.சொற்கள் பொருளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் தெரிவிக்கின்றன.பழக்கத்திலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இத்தன்மை உண்டு.இதன் அளவையும் ஓரளவு அறுதியிட்டு விடலாம்.நாள் தோறும் நாம் வழங்கிவரும் சொற்கள் கூட இவ்வாற்றலைப் பெற்றுள்ளன.

புதன், 17 நவம்பர், 2010

பனுவல்

சொற்கள்  கருத்துக்களை  உணர்த்துவதற்குரிய  குறியீடுகள்  என்றும்,அவற்றின்  பண்புகள்  யாவை  என்றும்  கவிதைகளால்  உணரலாம்.இச் சொற்களைக் கொண்டே  கவிஞன் தன் கற்பனைத் திறனால்  கவிதைகளைப்  படைக்கிறான்.
இக் கருத்தை  நன்னூலாரும்,
                                    ''பஞ்சிதன்   சொல்லாப்   பனுவலிழையாகச்
                                              செஞ்சொற்  புலவனே  சேயிழையா-எஞ்சாத
                                               கையேவா  யாகக்   கதிரே  மதியாக
                                              மையிலா   நூன்  முடியுமாறு''
 
                                               
உரை நடையில்  ஆளப் பெறும்  சொற்களுக்கும்,கவிதையில் கையாளப் பெறும் சொற்களுக்கும்  வேற்றுமை  இல்லை.கவிஞன்  அந்தச் சொற்களைக்  கையாளும்  முறையில் தான்   வேற்றுமை  உள்ளது.
ஒவ்வொரு  சொல்லுக்கும்  உரிய  நேரான  பொருளைத் தவுர,வழிவழியாக  அந்தச்  சொற்கள்  ஆளப் பெறும்  இடங்களின்  தொடர்பால்  அவற்றுடன்  சேர்ந்தமைந்த   கருத்துக்களும் உள்ளன.கவிதைகளில்  சொற்கள்  அமையும் பொழுது  இடத்திற்கேற்றவாறும்,உணர்ச்சிக்கேற்றவாறும்,சுவைக்கேற்றவாறும்  அமைந்து கவிதையைப்  பொலிவுடையதாக்குகிறது.

செவ்வாய், 16 நவம்பர், 2010

கற்பனையின்பம்

கற்பனை  என்பது   புலன்கள்  நேரே  ஒரு  பொருளை  அனுபவியாத  காலத்திலும்  அந்தப்  பொருளை  நினைவுக்குக் கொண்டு  வந்து  அப் பொருளினிடத்து  மீண்டும்  அனுபவத்தை  ஏற்ற வல்ல  ஒருவகை ஆற்றல்.கவிதைத் திறன்  கவிதைகளைக் கனிவித்துக்  கற்போரின்  மனத்தை  விரிந்த  பார்வையில்  செலுத்த வல்லது.காலைக் கதிரவனை  வருணிக்கும்  பாரதியின்  அற்புதச்  சொல்லோவியம்.

சனி, 30 அக்டோபர், 2010

முருகுணர்ச்சி

கவிதை  முருகுணர்ச்சியை  நல்குவது.எங்கெல்லாம்  அழகு  இருக்கின்றதோ  அங்கெல்லாம் கவிதை  தோன்றும்.நக்கீரர்  தாம்  உணர்ந்த  அழகைப்  பொதுமுறையில்  திருமுருகாற்றுப் படையில் பாடி  மகிழ்ந்தார்.அதில்  அவர் அழகின்  இயல்பை''கை புனைந்தியற்றாக் கவின் பெறு  வனப்பு''என்று  சுட்டி உரைத்துள்ளார்.
                                      இவ்வாறு  உணர்வு  நிலையை  நிலைபேறாக் குவித்து நம்மால்  அளந்தறிய முடியாத பெரும்பயனை  நல்க வல்லவை  அழகுணர்ச்சி பொதிந்துள்ள  கவிதைகள்.இத்தகைய  கவிதைகளைப் படித்துத் துய்த்தல்  மிகவும்  இன்றியமையாதது.இளைஞர்களையும்  இவற்றில்  ஈடுபடச் செய்வது மிகவும்  வேண்டப் படுவதொன்று.
பால்  கறந்த  மாத்திரையே  யுண்பார்க்குஞ்  சுவை பயக்குமாயினும்,அதனை  வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப்  பின் உண்பார்க்குக்  கழிபெருஞ்சுவை  தருதல் போலவும்,முற்றின கருப்பங் கழியை  நறுக்கிப் பிழிந்த  மாத்திரையே அதன் சாற்றைப்  பருகுவார்க்கு  அஃதினிமை  விளைக்குமாயினும் மேலும்  அதனைப்  பாகு  திரளக் காய்ச்சிச் சர்க்கரைக் கட்டியாக எடுத்துணிபார்க்கு  ஆற்றவும்  பேரினிமை  பயத்தல்  போலவும்,உரையும்  நலம்  பயப்பதொன்றாயினும்  அதனைக் காட்டிலும்  பாட்டாற்  பெறப்படும்  பயன்  சாலவும்  பெரிதாம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

இயற்கை இன்பம்

கவிதைக்கு  இலக்கணம்  காணத் துணிவதை விட ஒரு  நல்ல  கவிதையை  எடுத்துக்காட்டி''இது  போலிருப்பது தான்  கவிதை''!என்று  கூறுவது  எளிது ;பொருத்தமானதுங் கூட.
அழகின்பத்தை  அனுபவித்த பாரதி,
                                                எத்தனை  கோடி  இன்பம்  வைத்தாய்-எங்கள்
                                                இறைவா!இறைவா!இறைவா!
                                                சித்தினை  அசித்துடன்  இணைத்தாய்-அங்குச்
                                                சேரும்  ஐம்பூதமதில்  வியனுலகு  அமைத்தாய்
                                                அத்தனை  உலகமும்  வர்ணக் களஞ்சியம்
                                                ஆகப்  பலப்பலநல்  அழகுகள்  சமைத்தாய்
என்று  கூறிக்  களிக்கிறான்.
                                     கவிதை  என்பது  காணும்   பொருள்களை  வருணிப்பதில்  இல்லை.அப் பொருள்களைக்  காணுங்கால்  அவனுடம்  எழும்  மனநிலையில்  தான்  உள்ளது.அந்த  மனநிலைக்கு  ஒரு வடிவம்  கொடுத்து  அழகிய  சொற்களால்  ஓவியமாக  அமைப்பதே  கவிதையாகும்.அக்கவிதையைப்  படிக்கும் நம்மிடத்திலும்  அதே  மனநிலையை  உண்டாக்க வல்லது  கவிதை.திருக் குற்றால மலைக்கு  நாம்  எத்தனையோ  முறை  போயிருக்கின்றோம்.பல  இயற்கைக் காட்சிகளில்  ஈடுபட்டுத்  திளைத்திருக்கின்றோம்;ஒரு வகையனுபவத்தையும்  பெற்றிருக்கின்றோம். குமர குருபர  அடிகள்  பெற்ற  அனுபவம்  இது,
                                                 சிங்கமும் வெங்  களிறுமுடன்
                                                      விளையாடும்   ஒரு பால்;
                                                 சினப் புலியும்  மடப்பிணையும்
                                                         திளைத்திடும்   அங்கொருபால்
                                                 வெங்கரடி    மரையினொடும்
                                                           விளையாடும்   ஒருபால்;        
                                                  விட அரவும்   மட  மயிலும்
                                                             விருந்தயரும்   ஒரு பால்.
     இருப்பதை விட  இருக்க  வேண்டியதைக்  கூறுகின்றார்.அவர்  காணும்  காட்சியினை  நாம்  காணும் பொழுது  எல்லையற்ற  இன்பத்தைத்  துய்க்கிறோம்.

குற்றாலத்தில்  தங்கும்  பொழுதெல்லாம்   தேனருவியைப்  பார்க்கின்றோம்.அதன்  திரைகள்  வானின்  வழி  ஒழுகுகின்ற   வண்ணக் காட்சியையும்  காண்கின்றோம்.கவிஞர்  அதைக் காணும் விதம்
                                             தேனருவித்  திரையெழும்பி
                                                  வானின் வழி   ஒழுகும்
                                             செங்கதிரோன்   பரிக்காலும்
                                                      தேர்க் காலும்   வழுகும்
இயற்கையின்  இன்ப ஊற்றாக  கவிதை  திகழ்கிறது.
                                              .

கவியின்பம்

சீதா பிராட்டியின்  அழகை  வருணிக்கப்  புகுந்த  கம்ப நாடன்  பொன்னின் சோதி போதின் நாற்றம்,தேனின்  தீஞ்சுவை  என்று  ஒவ்வொன்றாகச் சொல்லிப்  பார்க்கிறான்.ஒன்று கூட  அவன்  சீதையைப்  பற்றிக் கொண்டிருந்த  கருத்தை  வெளியிடும்  ஆற்றல்  பெறவில்லை.இறுதியில் ,'செஞ்சொற் கவியின்பம்'  என்று  சொல்லி  மனநிறைவு  பெறுகிறான்.
                                                               உள்ளத்திலுள்ளவற்றை  உணர்ச்சி  பொங்கத்  தெள்ளத்  தெளிந்த  சொற்களால்  எடுத்துரைப்பது தான்  கவிதையாகும்.
கவிமணியவர்களும்,
                                        உள்ளத்துள்ளது    கவிதை-இன்பம்
                                            உருவெடுப்பது   கவிதை
                                       தெள்ளத்  தெளிந்த  தமிழில்-உண்மை
                                                   தெளிந்துரைப்பது   கவிதை
என்று    கவிதைக்கு  இலக்கணம்   கூறியுள்ளார்.
நன்னூலாசிரியரும்,
                                      பல்வகைத்   தாதுவின்
                                          உயிர்க்(கு)  உடல் போல்,பல
                                     சொல்லால்   பொருட்(கு)  இட
                                             னாக   உணர்வின்
                                     வல்லோர்   அணி  பெறச்
                                            செய்வன  செய்யுள்
என்று  கவிதையை  வரையறுக்கின்றார்.

சனி, 23 அக்டோபர், 2010

கவிதையின் இலக்கணம்

கவிதை  என்றால்  என்ன?  வினா  மிகவும்  எளியது தான்,ஆனால்  அதற்கு  விடையிறுப்பதோ  மிகவும்  கடினம்.கவிதையின்  இலக்கணத்தை  மேற்புல அறிஞர்கள்  வரையறுத்துக்  கூற முயன்றிருக்கிறார்கள்.ஆனால்,அவர்கள்  வெற்றியடையவில்லை.கவிதையென்பது  ஒலிநயம்  அமைந்த  அமைந்த  சொற்களின்  கட்டுக்கோப்பு;அஃது  இன்பத்தை  உண்மையுடன்  இணைப்பது; அறிவுக்குத்  துணையாக  கற்பனையைக் கொண்டிருப்பது  என்பது  ஜான்ஸன்  என்பாரின்  கூற்று.கார்லைல்  என்பார்,''இசை  தழுவிய  எண்ணமே  கவிதை''.என்று  வரையறுக்கின்றார்.
                                                      ''மனிதச் சொற்களால்  அடைய  முடிந்த  மகிழ்வூட்டவல்லதும்  செம்மை  நிறைந்த கூற்றே  கவிதையாகும்''இது  மாத்யூ அர்னால்டு  கவிதைக்குக்  கூறும்  இலக்கணம்.

புதன், 20 அக்டோபர், 2010

கவிதையின் சிறப்பு

கவிதை   ஓர்  அரிய  கலை.நுண்ணிய  கலை.கவிதையை  யாத்த கவிஞனின் உணர்ச்சியை  அதைப் படிப்போரிடமும்  உண்டாக்கவல்ல  அற்புத சாதனம்.கவிதையனுபவம்.அது கூறும்  பொருளில் இல்லை.கூறும் முறையில் தான் இருக்கிறது.கவிஞன் தான்  பெற்ற  உணர்ச்சிகளைத் தன்  கவிதைகளைப்  படிப்போரும்  பெற வேண்டும்  என்று  எண்ணிச் சில  யுக்தி முறைகளைக்  கையாண்டு  கவிதையைப்  படைக்கிறான்.அந்த  யுக்தி  முறைகளால்  உணர்ச்சியை  அதில்  பொதிய வைக்கிறான்.
                                                   கற்பனை,சொற்களின்  அமைப்பு முறை,ஒலி நயம்,யாப்பு முறை,அணி நலன்,தொடை நயம்,குறிப்புப் பொருள்,சுவைகள்  போன்ற  சில  முறைகளை  மேற்கொண்டு  கவிதையைப்  படைக்கிறான்.கவிதையைப்  படிக்க  வேண்டிய  முறையில்  இவை  தோன்றுமாறு  படித்தால்  கவிஞன்  பெற்ற  அனுபவத்தையே  நாமும்  பெறுகிறோம்.கவிஞன்  மேற்கொள்ளும்  யுக்திமுறைகளையெல்லாம்  ஓரளவு  விளக்கமாக  எடுத்தியம்புவது  கவிதையின்  சிறப்பு.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கவிதையின் கொடுமுடி

கவிதையனுபவத்தின்  கொடுமுடி;
                                உந்து மதகளிற்றன் ,ஓடாத  தோள்வலியன்
                                    நன்தகோ  பாலன்  மருமகளே,நப்பின்னாய்!
                               கந்தம்  கமழும்   குழலீ!கடை  திறவாய் ;
                                      வந்தெங்கும்  கோழி  அழைத்தன காண் ;மாதவிப்
                               பந்தல் மேல்  பல்கால்  குயிலினங்கள்  கூவின  காண்
                                      பந்தார்  விரலி !உன்  மைத்துனர்  பேர்  பாடச்
                              செந்தா  மரைக்கையால்  சீரார்   வளையொலிப்ப
                                       வந்து  திறவாய், மகிழ்ந்தெலோ  ரெம்பாவாய்
                                               என்று    நப்பின்னைப்  பிராட்டியை   எழுப்பும்  பாசுரத்தின்  சொற்களுக்கும்,சொற்றொடர்களுக்கும்  குறிப்புகள்  திருப்பாவையில்  உள்ளது.சொற்களின்  கட்டுண்ட  சாயல்களும்,விடுதலைச் சாயல்களும் ,பக்தியனுபவம்   போன்றவையும்  கவிதையனுபவத்தின்  கொடுமுடிக்குக் கொண்டு  செலுத்தியிருப்பதை  அறியலாம்.
ஐந்தாம்  நிலை;
                             கவிதையிலுள்ள  காட்சியை  மனக் கண்ணால்  கண்டதாலும்,அந்தக் காட்சியைக் காட்டிய  பாடலின்  ஒலி நயத்தாலும்,உள்ளத்தில்  ஏற்படும்  கிளர்ச்சி.
ஆறாம்  நிலை;
                               அந்த  உள்ளக் கிளர்ச்சியால்  ஏற்படும்  மனப்பான்மை.இதில் தான்  கவிதையனுபவம்  முழுமைநிலை  எய்துகின்றது.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

அடுத்த நிலைகள்

மூன்றாம்  நிலை;
                                    இரண்டாம்   நிலையில்   சொற்களோடு  தொடர்புற்றுச் சாயல்கள் மனக்கண் முன்  தோன்றின.இங்கு ,சொற்களின்  தொடர்பின்றியே  மனக்கண்ணில்  அந்தச் சாயல் புலப்படவேண்டும்.
                                                       சொற்கள் சொற்களாக  ஒலிக்கும்  நிலை  மாறி,அந்தப் பொருள்களே  மனக்கண்ணில்  தோன்றி  விளங்க வேண்டும்.
                                                         கவிதை  நுகர்ச்சியில்  ஈடுபடும்  பலரும்  ஒரேவித  சாயல்களையே  பெறுகின்றனர்  எனக்  கருதுதல்  தவறு.
நான்காம்  நிலை
                                   இதற்கு முன்னர்  வாழ்க்கையிலும்,கவிதைகளிலும்  பெற்ற  அனுபவங்களின்  நினைவுகள்  நாம்  படிக்கும்  கவிதைகளோடு  சேர்ந்து  நிற்றல்.
                                                     ஒரு கவிதையைப்  படிக்கும் பொழுது  அக்கவிதையிலுள்ள சொற்கள்  உணர்த்தும்  கருத்தினை  முதலில் பெறுகிறோம்.ஆனால்,இதனைத் தவிர, நம்மிடம் தோன்றும்  பிற எண்ணங்கள்  ஏன்?எண்ணக் கோவைகள் கூட மிக முக்கியமானவை .இவை  கேள்விப் புலச் சொற்சாயலால் ஏற்படலாம்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

நான்கு நிலைகள்

முதல் நிலை
                        ஒரு கவிதையை முதன் முதலாக  அச்செழுத்துக்கள்  வாயிலாகப் பெறும் பார்வைப் புலன் மூலம்(அல்லது  பிறர் படிக்க கேட்டால் பெறும் கேள்விப் புலன் மூலம்)பெறும்  ஒருவரிடம்  இவ்வனுபவத்தைப்  பொறுத்தே  ஏனையவை நிகழ்கின்றன.ஆனால்  பெரும்பாலானவர்களிடம்  இவை  முக்கியத்துவம்  பெறுவதில்லை.இக்காட்சி  தூண்டல்-துலங்கல்  முறையை ஒட்டியே  நிகழ்கிறது.தனிப்பட்ட  எழுத்துக்களின் வடிவங்கள்,அவற்றின் அளவு,எழுத்துக்களிடையே  உள்ள  இடைவெளி  ஆகியவை போன்ற  கூறுகள்  இந்த  எதிர் வினையில்  மிகச் சிறிய  பங்கினையே  பெறுகின்றன.இந்தக் கூறின் அடிப்படையில்  படிப்பவர்கள் பெரிதும்  வேறுபடுகின்றனர்.சிலரிடம்  பழக்கம்  பெரும் பங்கு  பெறுகின்றது.தாம்  வழக்கமாகப்  படித்துப் பழகிய  அதே  புத்தகத்திலிருந்து  ஒரு கவிதையைப்  படித்தால் தான்  அதற்குரிய அனுபவத்தைச்  சிலரால்  பெற முடிகின்றது.புதிய பதிப்பாகவோ,தாம்  படித்துப்  பழகாத புத்தகமாகவோ  இருந்தால்  தடுமாற்றம்  ஏற்படுகின்றது.

இரண்டாம் நிலை;
                                கண்ணால்  கண்டு உணர்ந்த  அல்லது  காதால்  கேட்டு  உணர்ந்த  சொற்களுக்குரிய  பொருள்களின்  சாயல்களை  மனம்  உணர்தல்.
                                                     சொற்களின்  காட்சிச் சாயலைத் தவிர  வேறு  இரண்டு  சாயல்கள் அவற்றுடன்  பிணைக்கப் பெற்றுள்ளன.அவை  கேள்விப் புலச் சாயல் ,ஒலிப்புப் புலச் சாயல்  என்பவை.இவற்றைக் ''கட்டுண்ட சாயல்கள்'' என்பார் ரிச்சர்ட்ஸ்.இவை  இரண்டும் அடங்கிய  சொற் சாயல் தான்
கவிதையின் ''முறையணைந்த  வடிவம்''

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

செவி நுகர் கனிகள்

கவிதையைப்  பாடியவரின்  உணர்ச்சி  அனுபவமும்,அதைப்  படிப்பவரின்  உணர்ச்சி அனுபவமும்  ஏறக்குறைய  ஒன்றாகி விட்டால்  படிப்பவர் கவிதையை  அனுபவிக்கும் தகுதி  பெற்று விட்டார் என்று கருதலாம்.கவிஞன் உணர்ந்த அனுபவம் அவன்  எழுதிய   கவிதையில் பொதிந்துள்ளது.தன் அனுபவத்திற்கு ஓர் அழகிய வடிவம் தந்து அதனைப் பெற வைக்கின்றான் கவிஞன்.
                           தன் அனுபவத்தை ஒரு செய்தி போல  கூறாது  அதனையே  கவிதை  மொழியாகப்  பெயர்த்து விடுகின்றான்.கவிஞனின்  உணர்ச்சி  கவிதையில் சொற்களாகவும்,சொற் பொருளாகவும்  ஒலி நயமாகவும்  வடிவம்  கொண்டுள்ளன.இவற்றைப் பற்றுக் கோடுகளாக  கொண்டு படிப்பவர்  கவிஞனின்  அனுபவத்தைத் திரும்ப  பெற வேண்டும்.
                                   '' வான் கலந்த  மாணிக்க வாசக நின் வாசகத்தை  நான் கலந்து  பாடுங்கால்''
என்ற   இராமலிங்க அடிகளின்  வாக்கு  இதற்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.உள்ளங் கலந்து  பாடினால்  கவிஞனின் இதயம்  படிப்போரின்  இதயத்தைத் தொட்டு விடும்.சங்கப் பாடல்களில் உள்ளன போல் சொற்களும்,சொற் பொருளும்  புதியனவாக இருந்தால் தொடக்கத்தில் சிறிது  தயக்கமும்,தடுமாற்றமும் நேரிடலாம்.அவற்றை அறிந்து  இரண்டாம் முறையில்  கவிதையைப் படிக்கும் போது  கவிஞனின்  உணர்ச்சியுடன்  ஒன்றி விட முடியும்  நிலையும்  ஏற்படும்.
                                        கவிதையின் ஒலிநயம்  உணர்ச்சியால் அமைந்திருக்கும்.உணர்ச்சியை  ஒழுங்கு படுத்த,விளங்குவது.அந்நயம்  கவிஞரின்  உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சியிலிருந்து  தோன்றியது,படிப்போர்  உள்ளத்தில் சுரக்கும்  உணர்ச்சியை  ஒழுங்கு படுத்தக் கருவியாக இருப்பது.ஆகவே,ஒரு கவிதையைப் படிக்குங்கால் உணர்ச்சி ஒழுங்குபட்டவுடன் ஒலிநயம் படிப்பவர்க்கு இயல்பாகி விடுதல் வேண்டும்.ஒலி நயமும்,உணர்ச்சியும்,தாளமும்,இசையும்  போன்றவை.கவிதை  'செவி நுகர் கனி' என்று  போற்றப் படுகின்றது.ஆகவே,கவிதையின்  ஒலி நயத்தைச் செவி உணருமாறு பாடுதல்  வேண்டும்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

புதுமையின்பம்

உள்ளக் கிளர்ச்சி  பற்றிய  சில கொள்கைகள்  உள்ளத்தை  ஆராய  முற்பட்ட சில  உளவியலறிஞர்கள்  உள்ளக் கிளர்ச்சி பற்றிய  சில கொள்கைகளை  நிறுவியுள்ளனர்.இவை கவிதையனுபவத்திற்கு  ஓரளவு  துணை  புரிபவை.கவிதையனுபவம் எங்ஙனம் நம்மிடம்  உண்டாகிறது  என்பதை  அறிவதற்கு  ஓரளவு  ஊன்று கோல்களாக  இருப்பவை.
                                              பழந் தமிழர்  கண்ட  கொள்கை;  பழந்தமிழர்  உள்ளக் கிளர்ச்சிகளில் பாட்டிற்குச்  சிறந்தனவற்றை மெய்ப்பாடுகள்  என  வழங்கினர்.
                      ''  உய்ப்போன்  செய்த்து   காண்போர்க்கெய்துதல்
                        மெய்ப்  பாடென்ப   மெய்யுணர்ந்தோரே''
என்ற  செயிற்றியனார்  கூற்று  ஈண்டு  சிந்திக்கற்பாலது.
                                                   கவிதையைப்  பற்றி  எத்தனையோ அறிஞர்கள்  எத்தனையோ  விதமாக  கூறியிருக்கின்றனர்.எஸ்ரா  பவுண்ட்  என்ற  அறிஞரின்  கருத்துப் படி  இலக்கியம்  என்பது  பொருட் செறிவுடைய  சொற்கள்  நிறைந்த  கருவூலமாகும்."பேரிலக்கியம்  என்பது  உயர்ந்த எல்லைவரை  பொருளூட்டம்  பெற்ற மொழியாகும்''என்பது  அவர் கருத்து.மேலும் அவர்,உரைநடை சொற் பெருக்கு  நிறைந்த அதிகச் செய்திகளடங்கிய  சாதனம்  என்றும் ,கவிதை  என்பது   சொற் செட்டும்,உணர்ச்சிப் பெருக்கும்  நிறைந்த  சாதனம்  என்றும்  கூறிக் கவிதைக்கும்,உரை நடைக்கும்  வேற்றுமை  காட்டுகின்றார்.நம்முடைய  பவணந்தியார்  கூறியுள்ள,
                              ''பல் வகைத் தாதுவின்  உயிர்க் குடல்  போற்பல
                                சொல்லாற்  பொருட்கிட  னாக   உணர்வின்
                                 வல்லோர்  அணி பெறச்  செய்வன  செய்யுள்''
என்ற  கவிதை  பற்றிய  நூற்பாவும்  ஈண்டு  சிந்திக்கத்  தக்கது.
                                                   கவிதை  அதனை  நுகரும்  திறனுடையவர்கட்கு  என்றும்  புதுமையின்பம் நல்க வல்லது.
அஃது'அறிதோறும்  அறியாமை  கண்டற்றால்'கவிதை,மனத்தின்  உயர்ந்த நிலையில் இருந்து  பிறந்த்து.மனமோ அளந்தறிய  முடியாத  ஆழம் உடையது.உளவியல் அறிஞர்களும்  அதன்  எல்லையை அளந்தறிய முடியாது  திகைக்கின்றனர்.மனத்தை  அறிய,அறிய அது  மென்மேலும்  ஆர்வம்  ஊட்ட வல்லது.அத்தகைய  மனத்தின்  உயர் எல்லையிலிருந்து  தோன்றிய  கவிதை  என்றும்  வளஞ் சுரந்து  இன்பம்  நல்க வல்லது.கவிதையைப் படிக்கப் படிக்க அஃது  இன்பத்தின் பரப்பையும்,துன்பத்தின்  ஆழத்தையும்  மென்மேலும்  விளக்க வல்ல  அரிய  ஆற்றலைக்  கொண்டது.
                                       ''நவில் தொறும்  நூல் நயம்  போலும் பயில்தொறும்
                                        பண்புடை  யாளர்   தொடர்பு''
என்று  வள்ளுவப் பெருமான்  குறித்த நயம் கவிதைக்கே  உரியது.இது  கருதியே  பாரதியும்
                                       ''பாட்டுத்  திறத்தாலே-இவ்வையத்தைப்
                                         பாலித்திட  வேணும்''
என்றார்.கவிதையைப்  படிப்போர்''அறிந்து  கொண்டோம்''என்று  அதனை  ஒதுக்கும்  நிலை  ஏற்படுவதில்லை.இதனால் தான்  கவிதை  இலக்கியம்  பற்பல  நூற்றாண்டுகள்  நிலைத்து  வாழ்கிறது.கற்பவர்களும்  தலைமுறை,தலைமுறையாக  அதனைத்  திரும்பத் திரும்பக்  கற்றுப்  புதுமையின்பம்   எய்துகின்றனர்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

உட்பாட்டு நிலையும்,உளச் செயலும்

சில  உட்பாட்டு  நிலைகள் உளச் செயலைத்  துரிதப்படுத்தும்;சில நிலைகள் அதனை மெதுவாக  நடை பெறவும் செய்துவிடும்.உற்சாகமான உட்பாட்டு நிலைக்கும் ,சோர்வான உட்பாட்டு நிலைக்கும் ஒருவரது உடல் நலம் காரணமாகலாம்;ஆனால்,அவை அதிகமாக ஒரு குறிக்கோளை  அடைவதில்  பெறும் வெற்றி அல்லது  தோல்வியைச் சார்ந்து நிற்கின்றன.ஒருவர்  கவிதைகளைப் படிப்பது ,சுவைப்பது  இத்தகைய உட்பாட்டு நிலையை ஓரளவு  பொறுத்துள்ளது  எனலாம்.

                                           ஹிப்போகிரேட்டஸ்  என்ற யவன அறிஞர்  நமது  உடலுக்குள்ளே  சில நீர்ப்பொருள்கள்  மிக்கிருப்பது  காரணமாக  மனநிலையும்  மாறும் என  இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூறியுள்ளார்.இந்தக் கொள்கை  நம் நாட்டு அகத்தியர்,தேரையர்  முதலியோர்  கருத்துக்கும் ஒத்து இருக்க  காண்கிறோம்.ஒவ்வொருவருக்கும்  பலப்பல  பண்புகள்  இருப்பினும்  அவற்றுள் ஒரு சிலவே  மேலோங்கித் தோன்றும்.ஒருவர் கவிதையைச் சுவைப்பது ஓரளவு இப்பண்புகளைப் பொறுத்திருக்கின்றது.
                                                               பல உள்ளக்கிளர்ச்சிகளின்  சேர்க்கையே பற்றாக  (sentiment)மாறுகின்றது  என்று  உளவியலார்  கூறுகின்றனர்.ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது பொருள்  மீது  நமது உள்ளக் கிளர்ச்சிகள் திரண்டு அமையும் பொழுது  பற்று உண்டாகிறது.இந்த உள்ளக் கிளர்ச்சிகளின் சேர்க்கை நாட்டுப் பற்றைக்  குறிக்கின்றது.
                                                     செந்தமிழ்  நாடெனும்  போதினிலே  இன்பத்
                                                     தேன் வந்து  பாயுது   காதினிலே-எங்கள்
                                                       தந்தையர்  நாடென்ற  பேச்சினிலே-ஒரு
                                                       சக்தி பிறக்குது   மூச்சினிலே
இது போன்றே  மொழிப் பற்றை அடிப்படையாக  கொண்டு  பல பாடல்கள்  அமைந்துள்ளன.
                                     யாமறிந்த  மொழிகளிலே  தமிழ் மொழி போல்
                                     இனிதாவது  எங்கும்  காணோம்
என்பன  போன்றவை  மொழிப் பற்றை  அடிப்படையாக  கொண்டு எழுந்தவை.